மழநாடு
தமிழ்நாட்டு மண்டலம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மழவர் நாடு அல்லது மழநாடு (Mazhanadu) என்பது தொண்டை நாடு, கொங்கு மண்டலம், கர்நாடகம் ஆகியவற்றின் இடையே உள்ள நிலப் பகுதியை குறிப்பிடப்படுவதாகும். மழநாடு சேர மரபினரின் கிளைக் குடியினரால் ஆளப்பட்ட பகுதியாகும். மழநாட்டில் சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்கள் அடங்கும்.[2] பண்டைய சங்க காலத்தில் இப்பகுதியை மழவர் மன்னன் கொல்லி மழவன் ஆண்டான். பிரபல சங்க கால பெண் புலவரான ஔவையார். தகடூரைச் சேர்ந்த அதியமான் நெடுமான் அஞ்சி, கொல்லிமலை வல்வில் ஓரி போன்ற மழவர் தலைவர்களுடன் நல்லுறவு கொண்டிருந்தார். மழநாடு மேல்மழநாடு (மேற்கு மழநாடு), [3] [4] கீழ்மழநாடு (கிழக்கு மழநாடு) என இரு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. கீழ்மழநாடு ஒரு காலத்தில் கொல்லி மழவனாலும் அவரது மரபினராலும் ஆளப்பட்டது. கீழ்மழநாடு அதன் நீர் வளத்திற்காக நன்கு அறியப்பட்டதாக ஒரு தமிழ்க் கவிதையில் குறிப்பிடப்பட்டுள்ளது.[5]
Remove ads
மழநாடு மண்டலம்
தமிழ்நாட்டில் 'மழநாடு' பகுதியைக் கொண்ட மாவட்டங்களின் புவியியல் மற்றும் மக்கள்தொகை போன்றவை கீழே உள்ள அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads