மாங்குடி சிதம்பர பாகவதர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாங்குடி சிதம்பர பாகவதர் என்பவர் கதாலாட்சோபத் துறையில் புகழ்பெற்றவர்.[1] இவருடைய கதாலாட்சோபனையானது அன்றைய அரசியல் சூழல், அர்த்தபாவம், நவரசம் போன்றவற்றைக் கொண்டிருந்தது. இவருடையப் பெயர், அன்றில் பதிப்பகம் வெளியிட்ட கருணாமிர்த சாகரம் எனும் நூலில் இடம்பெற்றுள்ளது.[2]
பிறப்பும் இளமைக் காலமும்
1880 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14 ஆம் நாள் இசைக்குப் பெயர்பெற்ற திருவையாறில் இவர் பிறந்தார். இவரின் பூர்விகம் அகரமாங்குடி எனும் சிற்றூர். இந்த ஊர், தஞ்சை-கும்பகோணம் சாலையில் உள்ள அய்யம்பேட்டை ஊருக்குத் தெற்கே 5 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது. அய்யம்பேட்டையிலிருந்து மெலட்டூர் செல்லும் வழியில் நடுவில் உள்ளது. தஞ்சை மன்னர் துலாஜாஜி அவையில் சாம்ராட் என்கிற என்ற பட்டத்துடன், கணவித்யா துறையில் அறிஞராக விளங்கிய கணம் திருமலை ஐயர் வம்சத்தைச் சேர்ந்தவர்.
திருவையாறு சீனிவாசராவ் பள்ளியில் படித்தபின், புனித பீட்டர் கல்லூரியில் படித்தவர். தஞ்சை கிருஷ்ணபாகவதரின் கதாகலாட்சேபங்கள், கோவிந்தசாமிபிள்ளை நாடகங்கள், மகா வைத்தியநாதய்யர், பட்டணம் சுப்பிரமணிய ஐயர் இசைக்கச்சேரிகள் ஆகியவை அவருடைய கலாரசனை வளரக் காரணமாக இருந்தன. சிதம்பர பாகவதர் காவிரிக்கரையில் தமது நண்பர்களுக்கு இசை நயத்தோடு பாடிக்காட்டினவர். தன் சகோதரர்களுக்குப் பின்பாட்டு, மிருதங்கப் பயிற்சி அளித்தார். அவர்கள் உதவியுடன் வீட்டில் கதாகலாட்சேபம் செய்தபின், பள்ளி நிர்வாகி வீட்டில் காலட்சேபம் செய்து பாராட்டு அடைந்தவர். அன்றுமுதல் பாகவதர் என்று அழைக்கப்பட்டார்.
1900 ஆம் ஆண்டு சிதம்பர பாகவதர் வழக்கறிஞர் ஆகும்பொருட்டு அதற்கான தேர்விற்காகத் தம்மைத் தயார் செய்துகொண்டிருந்தார். அந்நேரம், புலவர் பிரதாபராமசாமி பாகவதரும், அகரமாங்குடி சப்தரிஷீஸ்வர சாஸ்திரிகளும் சிதம்பர பாகவதரின் வாழ்க்கைப்போக்கைக் கதாகலாட்சேபத்தின் பக்கம் மாற்றிவிட்டனர். சிதம்பர பாகவதர் அவர்கள் இருவரிடமும் இசையையும் சமஸ்கிருதத்தையும் கற்றுக்கொண்டார். அவர் தில்லைஸ்தானம் பஞ்சுபாகவதரிடம் தியாகராஜர் கீர்த்தனைகளையும், சதாவதானி திருவையாறு பண்டிதர் லெக்சுமணச்சார்யாவிடம் பகவத் கீதையின் சாராம்சத்தையும் கேட்டுத் தெரிந்துகொண்டார்.
Remove ads
கலாட்சேபங்கள்
சென்னை சபாக்களில் ராமாயணக்கதையை ஐம்பதுக்கும் மேற்பட்டமுறை நிகழ்த்தியுள்ளார். மஹாபாரதம், பாகவதம், நாயன்மார் கதைகள் இவற்றில் அடக்கம். சிதம்பர பாகவதர் மும்பை, காசி ஆகிய நகரங்களிலும் கதாகாலட்சேபம் செய்துள்ளார். மணி நேரத்திறகும் குறையாமல் அவர் கதாகலாட்சேபம் செய்தவர். அவர் ஒரு சிவபக்தர். தான் செல்லுமிடத்திலுள்ள சிவத் தலங்கள் மீது தேவாரம் பாடுவதுடன், அக்கோயில்கள்மீது பதிகங்கள் பாடும் ஆற்றல் பெற்றிருந்தவர்.
1932 இல் சென்னை கோகலே அரங்கில் ராமாயணக்கதையை நிகழ்த்தியபோது, தியாகராஜசுவாமிகள் அருளியவற்றில் சுமார் 300 கீர்த்தனைகள் பாடி, அவர் மீதான பக்தியை வெளிப்படுத்தியவர். தியாகராஜ சுவாமிகள் ஆராதனைக் கமிட்டிக்குச் செயலாளராகவும் இருந்தவர். சிதம்பர பாகவதர் ஆண்டுதோறும் ஆருத்ரா உத்ஸவம் நடத்தி வந்தவர்.
Remove ads
மறைவு
அவர் 1938 ஆம் ஆண்டு காலமானார்.
பட்டங்கள்
1926 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை பகவத்கதாபிரசங்க சபை சார்பாக, சர்.சி.பி.ராமசாமி ஐயர், இவரைப் பாராட்டி மகாகத கண்டீவர என்ற பட்டமளித்தார்.
1927 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் ராமநாதபுரம் மன்னர் சிதம்பர பாகவதரைப் பாராட்டி அபிநவ பதாசார்யா என்ற பட்டம் தந்தார்.
1937ஆம் ஆண்டு சென்னை மியுசிக் அகாடமி, சங்கீத கலாநிதி என்ற பட்டம் அளித்துக் கௌரவித்தது. இவ்விழாவை ராஜாஜி துவக்கி வைத்தார்.[3]
எழுதிய நூல்
1927 ஆம் ஆண்டு சிதம்பர பாகவதர் காலட்சேபம் என்ற வியாஸம் என்ற நூலை எழுதி, அகில இந்திய இசை மாநாட்டிற்கு அனுப்பி வைத்தார்.
மேற்கோள்கள்
ஆதார நூல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads