மாணிக்கம்

From Wikipedia, the free encyclopedia

மாணிக்கம்
Remove ads

மாணிக்கம் (Ruby) என்பது இளஞ் சிவப்பு அல்லது அடர் சிவப்பு நிறத்திலுள்ளப் படிகக்கல்லாகும், இது நவரத்தினங்களுள் ஒன்று. இதன் சிவப்பு நிறம் குரோமியத்தால் ஏற்படுகிறது. ஒரு பொருளின் உறுதியை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோவின் உறுதி எண் முறையில் மாணிக்கத்தின் உறுதி எண் 9 ஆகும். இதை விட உறுதி எண் மிகுந்த படிகம் வைரம் ஆகும்.[1][2][3]

விரைவான உண்மைகள் மாணிக்கம், பொதுவானாவை ...

இளஞ்சிவப்பு-செம்மஞ்சள் குருந்தக்கல் பதுபராசம் அல்லது பதுபராகம் என அழைக்கப்படுகிறது.

தாய்லாந்து, கம்போடியா, ஆப்கானிசுத்தான் போன்ற நாடுகளில் மாணிக்கங்களை வெட்டி எடுக்கும் சுரங்கங்கள் உள்ளன. இலங்கையிலும் மாணிக்கங்கள் கிடைத்தாலும் நீலமே அதிகளவில் கிடைக்கிறது.

இயற்கை மாணிக்கம் மிகத்தூய்மையாக இருக்காது, நிறத்தில் தூய்மை குறைந்து இருக்கலாம், அதனுள் நூல் போன்ற இழை காணப்படலாம். இதை கொண்டே இயற்கை மாணிக்கத்தையும் செயற்கை மாணிக்கத்தையும் வேறுபடுத்துவார்கள்.

Thumb
பட்டை தீட்டப்பட்ட மாணிக்கம்
Thumb
மாணிக்கம்
Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads