மாதவையா கிருட்டிணன்

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாதவையா கிருட்டிணன் (M. Krishnan - மா.கிருஷ்ணன் - 30 சூன் 1912 - 18 பெப்ருவரி 1996), ஒரு முன்னோடி வனவுயிரிப் புகைப்படக்கலைஞராகவும், இயற்கையார்வலராகவும் எழுத்தாளராகவும் விளங்கியவர்.[1]

விரைவான உண்மைகள் மாதவையா கிருட்டிணன், பிறப்பு ...

பிறப்பு

30 சூன் 1912 அன்று திருநெல்வேலியிலுள்ள தச்சநல்லூரில் பிறந்தார்[2]. அவருடன் கூடப்பிறந்தோர் எண்மரில் கிருஷ்ணனே கடைக்குட்டி. அவர் தந்தை அ. மாதவையா ஒரு புகழ்பெற்ற எழுத்தாளரும் சமூக ஆர்வலருமாவார்.

படிப்பு

தொடக்கப்படிப்பை கிருட்டிணன் இந்து உயர்நிலைப்பள்ளியில் பயின்றார். பள்ளியிலேயே அவரது ஆர்வம் இலக்கியத்திலும் கலையிலும் இயற்கையின் மேலும் இருந்தது. 1927 இல் அவர் மாநிலக் கல்லூரியில் சேர்ந்து பின்னர் 1931 இல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அங்கு பணிபுரிந்து வந்த "பைசன்" (P.F.Fyson)என்ற தாவரவியல் பேராசிரியர் அவரை வெகுவாகக் கவர்ந்தார். அவருடன் இணைந்து நீலகிரிப் பகுதிக்கும், கொடைக்கானலுக்கும் களப்பயணங்கள் மேற்கொண்டார். கள ஆய்வின் நுணுக்கங்களை பைசனிடமிருந்து கற்றார்.[3]

Remove ads

எழுத்து

சிறு பத்திரிகைகளுக்குக் கட்டுரைகள் எழுதியும் படங்கள் கேலிச்சித்திரங்கள் வரைந்தும் சில காலம் பிழைப்பை நடத்தினார் கிருஷ்ணன். அவரது கட்டுரைத்தொகுப்பு அண்மையில் தியோடர் பாசுகரனின் தொகுப்பில் வெளிவந்தது[4]. கிருஷ்ணனின் வனவுயிரிப் புகைப்படவியல் குறித்த கட்டுரைகள் தி இல்லசுடிரேடட் வீக்லி ஆவ் இந்தியாவில் வெளிவந்தன. பின்னர் Z என்ற புனைப்பெயரில் த இந்து நாளிதழில் எழுதி வந்தார். 1950 இலிருந்து பெப்ருவரி 18, 1996 அன்று அவர் இறப்பு வரையிலும் கோல்கத்தாவிலிருந்து வெளிவரும் தி இசுடேட்சுமன் நாளிதழில் தொடர்ந்து வாரமிருமுறை கண்ட்டிரி நோட்டுபுக் என்ற தலைப்பில் இயற்கை வரலாறு பற்றி எழுதி வந்தார் கிருஷ்ணன்[5].

மேலும் இவரது சென்னை தமிழ் வளர்ச்சிக் கழகம் வெளியிட்ட கலைக்களஞ்சியத்தில் இவர் எழுதிய பறவைகள் பற்றிய கட்டுரைகளை பறவைகளும் வேடந்தாங்கலும் என்ற பெயரில் பெருமாள்முருகனைப் பதிப்பாசிரியராகக் கொண்டு வெளிவந்தது.

இயற்கை சார்ந்து கிருட்டிணனின் பணி

ஒரு சூழலியல் பாதுகாவலராகவே இருந்து வந்த கிருட்டிணன், அயல்நாட்டின மரங்கள் நம் நாட்டில் வளர்க்கப்படுவதைத் தீவிரமாக எதிர்த்தார். அமெரிக்கக்கண்ட இறக்குமதியான டபேபிவியா(Tabebuia) மரம் மஞ்சள் பூக்களுடன் பூத்துக்குலுங்கிய காட்சியை அவர் கண்டதும் வெகுண்டார். "இந்தக் காட்சி நமக்கெல்லாம் ஓர் இழுக்கு" என்று கூறிய கிருஷ்ணன், அம்மரங்களையெல்லாம் பிடுங்கியெறிந்து விட்டு அவ்விடத்தில் இந்திய மண்ணின் மரங்களை நட வேண்டும் என்றாராம்.

Remove ads

கிருட்டிணனின் இயற்கை குறித்த கருத்துகள்

  • The identity of a country depended not so much on its mutable human culture as on its geomorphology, flora and fauna, its natural basis - ஒரு நாட்டின் அடையாளம் மாறுதலுக்குட்பட்ட மனிதப் பண்பாட்டைச் சார்ந்திருத்தலை விடவும் அதன் புவிப்புறவுருவியலையும் தாவர விலங்கினங்களையும் அதன் இயற்கை அடிப்படையினையுமே சார்ந்துள்ளது.

குறிப்புகள்

வெளியிணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads