மாத்திரை (தமிழ் இலக்கணம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
தமிழ் இலக்கணத்தில் மாத்திரை எனப்படுவது ஒருவன் இயல்பாகக் கண் இமைக்கும் (சிமிட்டும்) நேரத்தைக் குறிக்கும் அளவாகும். எழுத்துகள் ஒலிக்கப்படும் கால நீட்டத்தைக் குறிக்க மாத்திரை என்னும் கால அளவு பயன்படுகின்றது. நாம் ஒரு பொருளைப் பார்த்துக் கொண்டிருக்கும் போதே கண் இயல்பாகவே மூடித் திறந்து கொள்ளும். இப்படி நம்மை அறியாமல் கண் இமைத்துக் கொள்ளும் கால அளவுதான் மாத்திரை.[1] [2][3][4]
- குற்றெழுத்துகளுக்கு (குறில் எழுத்துகளுக்கு) மாத்திரை ஒன்று (எடுத்துக்காட்டாக: அ, இ, ப, கி, மு)
- நெட்டெழுத்துகளுக்கு (நெடில் எழுத்துகளுக்கு) மாத்திரை இரண்டு (எடுத்துக்காட்டாக: ஆ, ஈ, ஏ, கா, வா, போ)
- தனி மெய்யெழுத்துகள், ஆய்த எழுத்து, குற்றியலுகரம், குற்றியலிகரம் போன்றவை அரை மாத்திரைதான் ஒலிக்கும்.
- உயிரளபெடை மூன்று மாத்திரையளவும், ஒற்றளபெடை ஒரு மாத்திரையளவும் ஒலிக்கும்.
- ஔகாரக்குறுக்கம், ஐகாரக்குறுக்கம் என்பன ஒன்று அல்லது ஒன்றரை மாத்திரையளவு ஒலிக்கும்.
- மகரக்குறுக்கம், ஆய்தக்குறுக்கம் என்பன கால் மாத்திரையளவு ஒலிக்கும்.
Remove ads
அடிக்குறிப்பு
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads