மாத்தேயு ரிக்கா
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாத்தியு ரிக்கா (ஆங்கிலம்: Matthieu Ricard; பிறப்பு: 15 பிப்ரவரி 1946) ஒரு பிரெஞ்சு எழுத்தாளரும், புகைப்படக் கலைஞரும், மொழிபெயர்ப்பாளரும், புத்தத் துறவியுமாவார். இவர் நேபாளத்தில் உள்ள செச்சென் டென்னி டார்ஜிலிங் மடத்தில் வசித்து வருகிறார்.
Remove ads
வாழ்க்கைக் குறிப்பு

பிரெஞ்சு நாட்டு அறிஞர்கள் மற்றும் ஆளுமைகளின் வட்டத்தில் வளர்ந்த மாத்தியு ரிக்கா,[1] 1972-இல் பாஸ்டர் இன்ஸ்டிடியூட்டில் மூலக்கூறு மரபியலில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் திபெத்திய புத்த மதத்தை பின்பற்ற முடிவு செய்து தனது அறிவியல் வாழ்க்கையைத் துறந்து இமயமலை உள்ளிட்ட இடங்களில் வாழத் துவங்கினார்.[2]

ரிக்கா மைண்ட் அண்ட் லைஃப் இன்ஸ்டிடியூட் என்ற நிறுவனத்தின் வாரிய உறுப்பினர் ஆவார். கருணா-ஷேசன் என்ற தனது அமைப்பின் மூலம் கிழக்கு நாடுகளில் அவர் ஆற்றிய மனிதாபிமானப் பணிகளுக்காக பிரெஞ்சு தேசிய சிறப்புப் பதக்கத்தை பெற்றார். 1989 முதல் 14வது தலாய் லாமாவுக்குப் பிரெஞ்சு மொழிபெயர்ப்பாளராக செயல்பட்டு வருகிறார்.[1] 2010 முதல் பல நாடுகளுக்குப் பயணித்து தொடர் உரையாற்றியும் கியாப்ஜே தில்கோ கியென்ட்ஸே ரின்போசேயின் அவதாரமாகக் கருதப்படும் தில்கோ கியென்ட்ஸே ரின்போச்சின் போதனைகளைக் கற்பிக்கும் பணியிலும் ஈடுபட்டு வருகிறார்.
ரிக்கா தனது நூல்களில் விலங்குகளின் உரிமையினை ஆதரித்து எழுதியுள்ளார். இவர் நனிசைவ வாழ்க்கை முறையினைப் பரிந்துரை செய்கிறார்.[3]
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads