மானாமதுரை சோமநாதசுவாமி கோயில்
தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்திலுள்ள ஒரு சிவன் கோயில் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மானாமதுரை சோமநாதசுவாமி கோயில் (Manamadurai Someswarar Temple, Sivaganga) தமிழ்நாட்டில் சிவகங்கை மாவட்டம், மானாமதுரை என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1] இக்கோயில் மானாமதுரையில் பாயும் வைகை ஆற்றின் மேற்குக் கரையில் அமைந்துள்ளது.

Remove ads
அமைவிடம்
கடல் மட்டத்திலிருந்து சுமார் 94 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலின் புவியியல் ஆள்கூறுகள்: 9°41'36.6"N, 78°27'07.9"E (அதாவது, 9.693502°N, 78.452205°E) ஆகும்.[2]
வரலாறு
இக்கோயில் பத்தாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]
கோயில் அமைப்பு
இக்கோயிலில் சோமநாத சுவாமி, ஆனந்தவள்ளி அம்மன் சன்னதிகளும், விநாயகர், சுப்பிரமணியர், பைரவர், சதாசிவ பிரம்மேந்திராள் உபசன்னதிகளும் உள்ளன. இங்குக் கோயில் தேர், கோயில் கல்வெட்டு போன்றவை உள்ளன. இக்கோயிலில் ஐந்து நிலை கொண்ட ராஜகோபுரம் உள்ளது. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அறங்காவலர்களால் நிர்வகிக்கப்படுகிறது.[3]
தொன்மம்
சந்திரன் 27 நட்சத்திங்களை மனைவிகளாகக் கொண்டிருக்கிறான். அந்த மனைவிகளில் ரோகிணி, கார்த்திகை ஆகிய இருவர் மீது மட்டும் மிகுதியான அன்புகொண்டவனாக இருக்கிறான். இதைக்கண்டு கோபமுற்ற அவனது மற்ற மனைவிகள் இதுபற்றி தம் தந்தை தட்சனிடம் முறையிடுகின்றனர். இதைக் கேட்டு சினமடைந்த தட்சன், சந்திரனுக்குச் சாபம் கொடுக்கிறான். சாபத்தினால் வெப்பு நோயால் பாதிக்கப்பட்டு, சந்திரன் தேயத் தொடங்குகிறான். தன் சாபத்துக்கு விமோச்சனம் என்றவென்று அகத்தியரிடம் சந்திரன் கேட்கிறான். அதற்கு அவர் வடக்கில் இருந்து தெற்கு நோக்கிப் பாயும் ஆற்றின் மேற்குக் கரையில் உள்ள வில்வ வனத்தில் உள்ள லிங்கத்தை கோயில்கட்டி வணங்கினால் இந்தப்பிணி நீங்கும் என்று கூறினார். அதன்படியே சந்திரனும் செய்து தன் பிணியை நீக்கிக்கொண்டான். மேலும் சந்திரனின் வேண்டுகோளுக்கு இணங்க, சிவபெருமான் தன் திருமுடியில் சந்திரனுக்கு இடம் தந்ததாக கோயில் தல வரலாறு தெரிவிக்கிறது.[4]
Remove ads
பூசைகள்
இக்கோயிலில் காரணாகம முறைப்படி நான்கு காலப் பூசைகள் நடக்கின்றன. சித்திரை மாதம் 8ம் திருநாள் மற்றும் 9ம் திருநாள் முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது. ஆடி மாதம் திருவிழா நடைபெறுகிறது. சித்திரை மாதம் தேரோட்டம் நடைபெறுகிறது. மார்கழி மாதம் தேய்பிறை அஷ்டமியன்று உலக ஜீவராசிகளுக்கு படியளக்கும் விழா நடத்தப்படுகிறது.[5]
விழாக்கள்
மதுரையில் நடப்பது போலவே மானாமதுரையிலும் 10 நாள் சித்திரைத் திருவிழா நடக்கிறது. மதுரையில் மீனாட்சி என்றால் மானாமதுரையில் ஆனந்தவல்லி. அங்கு சொக்கநாதர் என்றால் இங்கு சோமநாதர். திருமாலிருஞ்சோலையில் எழுந்தருளி சகோதரியின் திருமணத்தைக் காண வருகிறார் கள்ளழகர். அவரைப்போலவே மானாமதுரையில் வீர அழகர் எழுந்தருள்கிறார். வீர அழகருக்கு எதிர் சேவை, திரி எடுத்து சாமியாடுவது, பீச்சாங்குழல் சேவை என அனைத்தும் மதுரையில் நடப்பதுபோலவே இப்பகுதி மக்களாலும் செய்யப்படுகிறது.[6]
Remove ads
நிருவாகம்
இக்கோவில் சிவகங்கை சமஸ்தான தேவஸ்தான வாரியத்தின் கட்டுப்பாட்டிலும் பராமரிப்பிலும் உள்ளது.
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads
