மனிட்டோபா

கனடிய மாகாணம் From Wikipedia, the free encyclopedia

மனிட்டோபா
Remove ads

மானிட்டோபா (Manitoba) கனடாவின் நடுப்பகுதியில் ஒரு மாகாணமாகும். இந்த மாகாணத்தில் 2008 கணக்கெடுப்பின் படி 1,196,291 மக்கள் வசிக்கின்றனர். வடமேற்கு நிலப்பகுதிகளிலிருந்து கனடா அரசு பிரிவு செய்து 1870இல் இந்த மாகாணம் தொடங்கப்பட்டது. மானிட்டோபாவின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் வினிப்பெக் ஆகும். இம்மாகாணத்தில் உலகில் 10ஆம் மிகப்பெரிய ஏரி, வினிப்பெக் ஏரி அமைந்துள்ளது.

விரைவான உண்மைகள் Manitobaமானிட்டோபா, Confederation ...

இது கனடாவின் ஐந்தாவது பெரிய மாகாணம். 2021-ஆம் ஆண்டு கணக்கின்படி, இதன் மக்கள் தொகை 1,342,153 ஆகும். மனிடோபாவின் நிலப்பரப்பு மிகவும் வேறுபட்டது. நடு மற்றும் தெற்குப் பகுதிகளில் ஊசியிலைக்காடுகளும் பெரிய நன்னீர் ஏரிகளும் புல்வெளிகளும் காணப்படுகின்றன. இது மனிடோபாவின் மிகப்பெரிய நகரமும் அரசாங்கத்தின் தலைமையிடமும் ஆகும். கலை பண்பாடு பல்கலைக்கழகங்கள் தொழில்முறை விளையாட்டு அணிகள் எனப் பலவற்றிற்கும் வின்னிபெக் மையமாக விளங்குகிறது.

ஆங்கிலேய மற்றும் பிரெஞ்சு வணிகர்கள் 17-ஆம் நூற்றாண்டில் இங்கு வருவதற்கு முன் சுமார் 10,000 ஆண்டுகளாக இப்பகுதியில் பழங்குடி மக்கள் வாழ்ந்து வந்தனர். இப்பகுதி பிரித்தானிய ஆட்சியின் கீழ் ஹட்சன் பே கம்பெனியால் நிர்வகிக்கப்பட்டது. பிறகு 1869-ஆம் ஆண்டு கனடாவிடம் ஒப்படைக்கப்பட்டது. சிவப்பு ஆற்றுப் புரட்சிக்குப் பின் 1870-ஆம் ஆண்டு ஜூலை 15-ல் மனிடோபா சட்டம் நிறைவேற்றப்பட்டு கனடாவின் கூட்டமைப்பில் ஐந்தாவது மாகாணமாகச் சேர்ந்தது. ஆரம்பத்தில் மிகச்சிறியதாக இருந்த இதன் எல்லைகள் 1912-ஆம் ஆண்டு விரிவாக்கப்பட்டன.

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads