மானி (இறைவாக்கினர்)

From Wikipedia, the free encyclopedia

மானி (இறைவாக்கினர்)
Remove ads

மானி (Mani) مانی (கிபி 216 - 247) பிறப்பால் பாரசீகரான இவர்,[2][3][4], பாரசீகரும், இறைவாக்கினரும் ஆன இவர், மானி எனும் புதிய சமயத்தை நிறுவியவர்.

விரைவான உண்மைகள் இறைவாக்கினர் அல்லது தீர்க்கதரிசிமானி, தாய்மொழியில் பெயர் ...

இறைவாக்கினர் மானி, பாரசீகத்தின் பார்த்தியப் பேரரசுக்கு உட்பட்ட பபிலோனியாவின் பகுதியின் டெசிபோன் எனும் ஊரில் 216-இல் பிறந்தவர்.[5] இவரது ஆறு முக்கிய மெய்யியல் சாத்திர நூல்கள் சிரியாக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இவர் மத்தியகால பாரசீக மொழியில் எழுதிய தனது ஏழாவது மெய்யியல் நூலை சாசானியப் பேரரசர் முதலாம் ஷாபூருக்கு அர்பணித்துள்ளார்.[6]

Remove ads

பெயர்க் காரணம்

பாரசீக மொழியில் "மானி என்பதற்கு "என்றென்றும் வாழ்பவர்" அல்லது "நித்தியமானவர்" எனப்பொருளாகும்.

வாழ்க்கை


3-ஆம் நூற்றாண்டின் மானியின் பளிங்கு முத்திரையில், சிரியாக் மொழியில், மானி, இயேசு கிறிஸ்துவின் இறைவாக்கினர் என்று எழுதப்பட்டுள்ளது. பார்த்தியப் பேரரசுக்குட்பட்ட, பபிலோனியாவிற்கு அருகில் உள்ள டெசிபோன் எனும் ஊரில் பாதிக் மற்றும் மரியம் இணையருக்கு கிபி 216-இல் பிறந்தார். இவரது தந்தை பாதிக் ஒரு யூதக் கிறித்துவர் ஆவார். இவர் தாய் மரியம் பார்த்தியர்களின் வழித்தோன்றல் ஆவார்.[7][8]

மானி தமது 12 மற்றும் 24 வயதுகளில், இறை அருள் பெற்று, தமது தந்தையை விலகி, இயேசுவின் உபதேசங்களை மக்களுக்கு விளக்கிக் கூறத்தொடங்கினார்.

கிபி 240-41களில் மானி பண்டைய இந்தியாவின் சகர்கள் வாழ்ந்த தற்கால ஆப்கானிஸ்தான் நாட்டிற்குப் பயணித்தார். அங்கு மானி இந்து மற்றும் பௌத்தம் போன்ற சமயச் சாத்திரங்களின் தத்துவங்களைக் கற்றார். அல்-பிருனி எனும் பாரசீக அறிஞரின் கூற்றுப்படி, மானி, பாரசீகத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்ட பின் இந்தியாவிற்குச் சென்றார் எனக் கூறுகிறார்.[9]

கிபி 242-இல் இந்தியாவிலிருந்து திரும்பிய மானி, பாரசீக சாசானியப் பேரரசர் முதலாம் ஷாப்பூரின் அரசவையில் சேர்ந்து, மானி சமயம் எனும் புதிய சமயத்தை நிறுவினார்.

இறைவாக்கினர் மானி, ஷாபூராகான் எனும் நூலை எழுதி பேரரசருக்கு அர்ப்பணித்தார். ஆனால் பேரரசர் தாம் பின்பற்றி வந்த சொராட்டிரிய நெறியை விட்டு விலகி, மானியின் மானி சமய நெறிகளை ஏற்கவில்லை.[10]

பேரரசர் ஷாப்பூரின் மகன் முதலாம் பக்ரம் மானி சமய நெறியை பின்பற்றினார். சொராட்டிரிய நெறியை பின்பற்றிய முதலாம் ஹோர்மிசிடு ஆட்சிக் காலத்தில் இறைவாக்கினர் மானியை சிறையில் அடைத்தார். இறைவாக்கினர் மானி ஒரு மாதத்திற்குள், கிபி 274-இல் சிறையிலேய மாண்டார்.[11]

இறைவாக்கினர் மானியின் ஆதரவாளர்கள், இயேசு கிறிஸ்து போன்று இறைவாக்கினர் மானி சிலுவையில் உயிர்நீத்தார் என பரப்புரை மேற்கொண்டனர்.

Remove ads

பணிகள்

இறைவாக்கினர் மானி தமது மெய்யியல் தத்துவ நூல்களை சிரியாக் மொழியில் ஆறு தொகுப்புகளும், பாரசீக மொழியில் ஒரு நூலும் வெளியிட்டார்.

போதனைகள்

இறைவாக்கினர் மானி தமது போதனைகளை, கிறித்துவம், சொராட்டிரிய நெறி மற்றும் பௌத்த நெறிகளை வெற்றிக் கொள்ளத்தக்க வகையில் ஆக்கினார். நன்மை மற்றும் தீமையின் கடுமையான இரட்டை (துவைதம்) அடிப்படையிலானது, அவைகள் நித்திய போராட்டத்தில் பூட்டப்பட்டுள்ளது என்பதே இவரது போதனையின் சாரம் ஆகும்.

தனது இருபதாவது வயதில், கல்வி, தன்னை மறுத்தல், உண்ணாநோன்பு மற்றும் கற்பு ஆகியவற்றின் மூலமே வீடுபேறு அடைய முடியும் முடிவு எடுத்தார். தூய ஆவியானவர் உறுதியளித்தபடியும், புதிய ஏற்பாடு கூறியவாறும், தாமே இறுதி இறைவாக்கினர் எனத் தம்மைக் அழைத்துக் கொண்டார்.[12]

இவரது சமயம் சரியாக கிறித்தவர்களிடையே பரவாமல் இருந்தபோது, தம்மை இயேசு கிறிஸ்துவின் தீர்க்கதரிசி எனக்கூறிக்கொண்டார். இயேசு மற்றும் மேரி மாதாவை மேன்மையாகப் புகழ்ந்து பாடல்கள் எழுதினார். மானியிச மரபினர், இறைவாக்கினர் மானியை, சரத்துஸ்தர் மற்றும் கௌதம புத்தர் மற்றும் இயேசுவின் அவதாரம் எனக் கூறிக்கொண்டனர்.

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads