பார்த்தியப் பேரரசு

From Wikipedia, the free encyclopedia

பார்த்தியப் பேரரசுmap
Remove ads

பார்த்தியப் பேரரசு (Parthian Empire) (ஆட்சிக் காலம்; கி மு – 247 - கி பி 224), என்பதை அர்சசிது பேரரசு (Arsacid Empire) என்றும் அழைப்பர். பண்டைய ஈரானின் பார்த்திய மொழி பேசும் மக்கள், ஈரானிலும், ஈராக்கிலும் அரசியல் மற்றும் நாகரீகத்தில் மிகவும் செல்வாக்குடன் விளங்கியவர்கள்.[6]

விரைவான உண்மைகள் பார்த்தியப் பேரரசு, தலைநகரம் ...

முதலாம் அர்செஸ் கிமு மூன்றாம் நூற்றாண்டின் நடுவில் பாரசீகத்தின் வடகிழக்கில் உள்ள குராசான் பெருநிலப்பகுதிகளை, கிரேக்க செலுக்கியப் பேரரசிடமிருந்து கைப்பற்றி, (கிமு 171 – கிமு 138) பார்த்தியா இராச்சியத்தை நிறுவியவர் ஆவார். இவருக்குப் பின் வந்த பார்த்தியாவின் ஆட்சியாளர்கள் இராக்கின் வடமேற்கு பகுதிகளான மீடியாப் பேரரசு, மேல் மெசொப்பொத்தேமியா பகுதிகளை கிரேக்க செலுசிட் பேரரசிடமிருந்து கைப்பற்றி பார்த்தியப் பேரரசை விரிவு படுத்தினார்.

பின்னர் பண்டைய அண்மை கிழக்கின் துருக்கி முதல் ஈரான் வரை தங்கள் ஆட்சியை விரிவுப்படுத்தினர். மேற்கே மத்தியதரைக்கடலின் உரோம் பேரரசு முதல் கிழக்கே சீனாவின் ஹான் பேரரசு வரை செல்லும் பட்டுப் பாதையில் அமைந்த பார்த்திய பேரரசு வணிகம் மற்றும் பொருளாதார மையமாக விளங்கியது. இப்பேரரசினர் சொராட்டிரிய நெறியைப் பயின்றனர்.

Remove ads

பார்த்திய பேரரசின் பரப்பளவு

பார்த்தியப் பேரரசில் தற்போதைய ஈரான், ஆர்மீனியா, ஈராக், ஜார்ஜியா, கிழக்கு துருக்கி, கிழக்கு சிரியா, அசர்பைஜான், துர்க்மெனிஸ்தான், ஆஃப்கானிஸ்தான், பாகிஸ்தான், குவைத், பாரசீக வளைகுடா, சவுதி அரேபியாக் கடற்கரை, பஹ்ரைன், கத்தார், ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளைக் கொண்டது.

சமூகம் & பண்பாடு

Thumb
பார்த்தியக் குதிரை வீரன்

கிரேக்க செலுசிட் பேரரசின் பண்பாடும், நாகரீகமும் பரவிய பார்த்தியப் பேரரசில், கிரேக்க பண்பாட்டின் தாக்கத்தால் மறுமலர்ச்சி பெற்ற பாரசீக பண்பாடு மற்றும் நாகரீகத்தை மக்கள் விரும்பி ஏற்றனர்.

கிரேக்கர்களை பின்பற்றி பார்த்தியப் பேரரசர்கள் தங்கள் உருவம் பதித்த நாணயங்களை வெளியிட்டனர்.

Thumb
வெண் களிமண்னால் மனிதத் தலை வடிவில் செய்யப்பட்ட நீர் வைக்கும் பாத்திரம்; காலம்- கி மு 1 - 2-ஆம் நூற்றாண்டு

சமயங்கள்

பல்வேறு மொழி, பண்பாடு, நாகரீகங்கள் கொண்ட பார்த்தியப் பேரரசில் பல தெய்வ வழிபாடுகள் கொண்ட கிரேக்க சமயங்களும்; சரத்துஸ்திர சமயம், யூத சமயம், மானி சமயம், பௌத்தம் மற்றும் பாபிலோனிய சமயங்கள் மக்கள் பின்பற்றினர்.

கலை மற்றும் இலக்கியம்

Thumb
பண்டைய ஹாத்ரா, தற்கால ஈராக், கட்டிய ஆண்டு; கி பி 50

பார்த்திய கலைகள், பிரதேசம் மற்றும் வரலாறு வாரியாக பாரசீகம், மெசபடோமியா மற்றும் பாத்தியன் மொசபடோமிய என மூன்று வகையான கலைகள் கொண்டது.

Thumb
பழைய ஏற்பாட்டில் எஸ்தரின் நூலில் காணப்படும் ஒர் சுவர் சித்திரக் காட்சி; காலம் கி பி 245

பார்த்தியர்கள் ஈரானிய மற்றும் கிரேக்க கட்டிடக் கலை நயத்துடன், வளைவுகளுடன் கூடிய பெரும் கட்டிடங்கள் மற்றும் சிற்பங்களை வடித்தனர்.

மொழி

பார்த்தியப் பேரர்சில் அலுவல் மொழியாக கிரேக்க மொழியும்; பேச்சு மொழியாக பழைய அரமேய மொழியும், உள்ளூர் பார்த்திய மொழி, மத்திய கால பாரசீக மொழியும் விளங்கியது.

Remove ads

வீழ்ச்சி

சாசானியர் வம்சத்தின் முதலாம் அர்தசிர், கி பி 224-இல் பார்த்தியப் பேரரசின் இறுதி மன்னர் நான்காம் அர்தபனாஸை வென்றதன் மூலம் பார்த்தியப் பேரரசு வீழ்ச்சி கண்டது.

பார்த்தியப் பேரரசின் ஆட்சியாளர்கள்

Remove ads

இதனயும் காண்க

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads