மாயாவதி குமாரி
இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாயாவதி நைனா குமாரி (இந்தி: मायावती) ஒரு இந்திய அரசியல்வாதியும், உத்தரப் பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும் ஆவார். இவர் நான்கு முறை உத்தரப்பிரதேச முதல்வராகப் பொறுப்பு வகித்துள்ளார். 2008இல் ஃபோர்ப்ஸ் இதழ் வெளியிட்ட உலகின் சக்தி வாய்ந்த 100 பெண்கள் பட்டியலில் மாயாவதியின் பெயரும் இடம் பெற்றது.
1984இல் கான்ஷி ராமால் தலித் மக்களுக்காக தொடங்கிய பகுஜன் சமாஜ் கட்சியில் மாயாவதி ஒரு முக்கிய அரசியல்வாதியாக இருந்தார்.
Remove ads
இளமைப்பருவம்
மாயாவதி இந்தியாவின் தலைநகர் புது தில்லியில் பிறந்து வளர்ந்தவர். 1956-ம் வருடம் சனவரி 15 அன்று இரண்டாவது பெண் குழந்தையாக பிறந்தார். இவரது தந்தை ஒரு அஞ்சல் அலுவலக ஊழியர். தமது அன்னையின் அரவணைப்பால் கலை மற்றும் கல்வியில் இளங்கலை பட்டப்படிப்புகளைப் பயின்றார். பின்னாளில் சட்டத்தில் இளங்கலை பட்டம் பெற்றுள்ளார்.
மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads