மாயா ராவ்
இந்திய பாரம்பரிய நடனக் கலைஞர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாயா ராவ் (Maya Rao)(1928 மே 2 -2014 செப்டம்பர் 1) என்பவர் கதக் நடனத்தில் ஓர் இந்திய பாரம்பரிய கலைஞரும், நடன இயக்குநரும் கல்வியாளரும் ஆவார். கதக் நடனக் கலைகளில், குறிப்பாக நடனப் பாலேக்களில் தனது முன்னோடிப் பணிகளுக்காக அறியப்பட்ட இவர், வட இந்திய - நடன பாணியான கதக்கை தென்னிந்தியாவிற்குக் கொண்டுவந்த பெருமைக்குரியவராவார்.[1] 1987-ல் பெங்களூரில் உள்ள மல்லேசுவரத்தில் இவர் கதக் நாட்டியம் மற்றும் நடனப் பள்ளியை நிறுவினார்.[2][3] இவரது நடன நிறுவனமான "நாட்டிய அண்ட் ஸ்டெம் டான்சு காம்ப்னி", கதக் நாட்டியம் மற்றும் நடனப் பள்ளியின் கலவையாகும். பெங்களூரைத் தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் (இவரது மகள் மது நடராஜால் நிறுவப்பட்டது) இயக்குநராகவும் இருந்தார்.[4][5] செய்ப்பூர் கரானாவின் குரு சோகன்லாலின் கீழ் இவரது ஆரம்ப பயிற்சிக்குப் பிறகு, செய்ப்பூர் கரானாவின் குரு சுந்தர் பிரசாத், இலக்னோ கரானாவின் குரு சம்பு மகாராஜ் ஆகியோரின் கீழ் தில்லியில் உள்ள தேசிய கதக் நடனக் கழகத்தில் பயிற்சிக்குச் சென்றனர்.
1989ஆம் ஆண்டில் இசை, நடனம் மற்றும் நாடகத்திற்கான தேசிய அகாடமி, சங்கீத நாடக அகாதமியின் சங்கீத நாடக அகாதமி விருது இவருக்கு வழங்கப்பட்டது. 2011ஆம் ஆண்டில், அகாதமி இவருக்கு சங்கீத நாடக அகாதமி தாகூர் இரத்னா விருதினை வழங்கியது. இது ரவீந்திரநாத் தாகூரின் 150ஆவது பிறந்த நாளைக் குறிக்கும் வகையில் இந்தியா முழுவதிலும் இருந்து 100 கலைஞர்களுக்கு கலைத்துறையில் அவர்கள் செய்த பங்களிப்புக்காக வழங்கப்பட்டது.[6][7]
Remove ads
இளமை
மாயா பெங்களூரில் உள்ள மல்லேசுவரத்தில், ஹத்தங்கயின் சஞ்சீவ் ராவ், நகரத்தின் புகழ்பெற்ற கட்டிடக் கலைஞர் மற்றும் சுபத்ரா பாய் ஆகியோரின் மரபுவழி கொங்கனி சரசுவத் பிராமண குடும்பத்தில் பிறந்தார். இவருக்கு மூன்று சகோதரர்களும் மூன்று சகோதரிகளும் இருந்தனர். சிறு வயதிலேயே இவர் இந்துசுதானி இசையைக் கற்றுக்கொண்டார். இராமராவிடமிருந்து குரல் மற்றும் தில்ருபாவைக் கற்றுக் கொண்டார். இவர் பெண்கள் நடனம் கற்காத ஒரு மரபுவழி குடும்பத்தைச் சேர்ந்தவர். இவரும் இவரது பொறியாளரான தந்தையும் பெங்களூரில் உள்ள பி. ஆர். வி. திரையரங்க கலையரங்கில் நடனக் கலைஞர் உதய் சங்கரின் குழுவினரைப் பார்த்த பிறகு இது மாறியது. நடனத்தால் ஈர்க்கப்பட்ட இவரது தந்தை தனது மகள்கள் நடனம் கற்க வேண்டும் என்று விரும்பினார்.[8][9]
இவரது குரு பண்டிட் இராமராவ் நாயக், உசுதாத் பயாசு கானின் சீடராகவும், ஆக்ரா கரானாவின் பாடகராகவும் இருந்தார்.[10] பெங்களூரில் உள்ள பென்சன் நகரத்தில் இசை மற்றும் நடனப் பள்ளியை நடத்தி வந்தார். இங்கு பல்வேறு நடன மற்றும் இசை நடைகள் கற்பிக்கப்பட்டன. இங்கே செய்ப்பூர் கரானாவைச் சேர்ந்த சோகன் லால் கதக் பிரிவின் பொறுப்பாளராக இருந்தார்.[11] விரைவில், இவரது தங்கைகளான உமா மற்றும் சித்ரா முறையே ஆறு வயது மற்றும் நான்கு வயது, குரு சோகன்லாலின் கீழ் கதக் கற்கத் தொடங்கினர். இறுதியாக, இவரது தந்தை 1942ஆம் ஆண்டில் இவரது கதக் பயிற்சியைத் தொடங்க அனுமதித்தார். ஒருபோதும் தொழில் ரீதியாகவோ அல்லது மேடையில் நடனமாட மாட்டேன் என்ற வாக்குறுதி அளித்த இவர், விரைவில் அதை முறித்துக் கொண்டார். அடுத்த இரண்டு வருடங்கள் இவர் பயிற்சி பெற்றார். இருப்பினும், 1944ஆம் ஆண்டில், சரசுவத் சமாஜ் சமூக திட்டத்திற்காக பெங்களூர் நகர மண்டபத்தில் முதல் நிகழ்ச்சியினை நடத்தினார். இதை இவரது தந்தை எதிர்க்கவில்லை.[8][9]
Remove ads
தொழில்
கதக்கைத் தேடி 1951-ல் செய்ப்பூருக்குச் சென்றார். அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு மகாராணி காயத்ரி தேவி பெண்கள் பொதுப் பள்ளியில் ஆங்கிலம் கற்பிக்கத் தொடங்கினார். பின்னர் இவர் இலங்கைக்குச் சென்று புகழ்பெற்ற நடனக் கலைஞரான சித்ரசேனருடன் கண்டியன் நடனத்தைப் பயின்றார். இதைத் தொடர்ந்து, 1955ஆம் ஆண்டில் இவர் இந்தியாவின் மதிப்புமிக்க அரசு உதவித்தொகையைப் பெற்றார். புகழ்பெற்ற குருலக்னோ கரானாவின் சம்பு மகாராஜின் கீழ் புது தில்லியின் பாரதியக் கேந்திராவில் பயிற்சி பெற்றார். இவர் கேந்திரத்தின் முதல் மாணவராகவும், பண்டிட் சம்பு மகாராஜின் முதல் சீடராகவும் இருந்தார். இவர் தனது வாழ்நாள் முழுவதும் நடனமாடிய ஒரே மாணவி ஆவார். 1960ஆம் ஆண்டில், முதுகலை நடனத்திற்காக தனது சோவியத் கலாச்சார உதவித்தொகைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964ஆம் ஆண்டில் உருசியாவிலிருந்து திரும்பியதும், சங்கீத நாடக அகாதமியின் துணைத் தலைவரான கமலதேவி சட்டோபாத்யாயின் உதவியுடன், பாரதிய நாடிய சங்கத்தின் உதவியுடன் தில்லியில் நாட்டிய, நடனப் பள்ளி என்ற நிறுவனத்தைத் தொடங்கினார்.[8][9][12][13]
இசை மற்றும் நடனம் தொடர்பான மாநில அகாடமியான கருநாடக சங்க நிருத்யா அகாடமியின் தலைவரானார். மேலும் 1987 முதல் 1990 வரை இவர் பதவியிலிருந்தபோது, சோமநாதபுரம், பட்டடக்கல் மற்றும் ஹளேபீடு போன்ற மாநிலத்தின் பாரம்பரிய நினைவுச்சின்னங்களில் தேசிய கலை விழா நிகழ்ச்சிகளைத் நடத்தினார்.[14] நடன உருவாக்கம்/நடன அமைப்பிற்கான சங்கீத நாடக அகாதமி விருது 1989ஆம் ஆண்டில் இவருக்கு வழங்கப்பட்டது.[15] 1986ஆம் ஆண்டில் கருநாடக மாநிலத்தின் இரண்டாவது மிக உயர்ந்த குடிமக்கள் கௌரரவமான ராஜ்யோத்சவ விருதும்,[16] கர்நாடக அரசால் 1999ஆம் ஆண்டிற்கான சாந்தலா விருதும் இவருக்கு வழங்கப்பட்டன.[17] 2013ஆம் ஆண்டில், சங்கீத நாடக அகாதமியால் வழங்கப்பட்ட 'தாகூர் இரத்னா' விருதைப் பெற்ற அதே ஆண்டில் இவர் காவிய பெண்கள் மாநாட்டில் நடனம் மற்றும் நடனக் கலைக்கான பங்களிப்புக்காக வாழ்நாள் சாதனையாளர் விருதையும் பெற்றார்.[18] பல ஆண்டுகளாக, இவர் 3,000க்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி அளித்துள்ளார்.[19] குறிப்பாக, நிருபமா இராஜேந்திரன், சையத் சலாவுதீன் பாஷா, சத்ய நாராயண சர்கா, சம்பு ஹெக்டே, சிவானந்தா ஹெக்டே போன்றோர்.
இவரது மகள் மது நடராஜ் ஒரு புகழ்பெற்ற கதக் நடனக் கலைஞரும் நடன இயக்குநரும் ஆவார். மேலும் கதக் நடனம் மற்றும் நாட்டியப் பள்ளியின் கிளையான "ஸ்டெம்" என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். மாயா தனது கடைசி நாட்கள் வரை தனது நிறுவனத்தில் ஆலோசகராகவும் நடன இயக்குனராகவும் நடனச் சேவையினைத் தொடர்ந்தார். மாயா ராவின் சுயசரிதை, மாயா ராவ் - எ லைப் டைம் இன் கோரியோகிராபி 2013ஆம் ஆண்டில் இவரால் நிறைவு செய்யப்பட்டு, நாடக ஆசிரியரும், ஞானபீட விருது பெற்றவருமான சிறீ கிரீஷ் கர்னாட் அவர்களால் 2014 சூலையில் வெளியிடப்பட்டது.[20]
Remove ads
இறப்பு
பெங்களூரில் உள்ள எம். எசு. இராமையா நினைவு மருத்துவமனையில், 2014 செப்டம்பர் 1, அன்று இரவு 11.30 மணியளவில் மூச்சுத் திணறல் மற்றும் மார்பு வலி காரணமாக அனுமதிக்கப்பட்ட இவர் நள்ளிரவுக்குப் பிறகு இருதயக் கோளாறால் இறந்தார்.[14][16]
குறிப்புகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads