மாரஞ்ஞோ
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாரஞ்ஞோ (Maranhão, போர்த்துக்கேய ஒலிப்பு: [mɐɾɐˈɲɐ̃w]) என்பது பிரேசிலின் வடகிழக்கு மாநிலங்களுள் ஒன்று. இம்மாநிலத்துக்கு வடக்கில் அத்திலாந்திக் பெருங்கடலும், மற்ற எல்லைகளில் பியவி, டொக்காட்டின்சு, பாரா ஆகிய மாநிலங்களும் உள்ளன. வடகிழக்கு பிரேசில் வட்டார வழக்குக்கு உள்ளேயே இம்மாநில மக்களுக்குத் தனித்துவமான ஒலிப்பு முறை உண்டு. கொன்சால்வசு டயசு எழுதிய பாம் மரங்களின் நிலம் (The Land of the Palm Trees), அலூசியோ அசவேடோ எழுதிய காசா டி பென்சாவோ ஆகிய நூல்களில் மாரஞ்ஞோ பற்றிய விபரிப்புக்கள் காணப்படுகின்றன.
சூழல் பாதுகாப்புத் தொடர்பில் இம்மாநிலத்தின் லென்கோயிசு மணல்மேடுகள் முக்கியமானவை. யுனெஸ்கோ பாரம்பரியக் களமாக தேர்வு செய்யப்பட்டுள்ள மாநிலத் தலைநகரமான சாவ் லூயிசும் (São Luís) ஆர்வத்துக்குரியது.
Remove ads
குறிப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads