குளிர்கால அரண்மனை

From Wikipedia, the free encyclopedia

குளிர்கால அரண்மனைmap
Remove ads

குளிர்கால அரண்மனை (Winter Palace, உருசியம்: Зимний дворец, ஒ.பெ சீம்னிய் துவரியெத்ஸ்) என்பது குளிர்கால அரண்மனை என்பது உருசியாவில் சென் பீட்டர்சுபெர்கு நகரில் உள்ள ஓர் அரண்மனையாகும். இது 1732 முதல் 1917 வரை முந்தைய பேரரசர்களான ரோமானோவ் வம்சத்தின் அதிகாரப்பூர்வ இல்லமாக செயல்பட்டது. அரண்மனையிலும் அதன் வளாகங்களில்லும் இப்போது ஏர்மிட்டேச் அருங்காட்சியகம் உள்ளது. இதன் தரைப் பரப்பளவு 233,345 சதுர மீட்டர் (அரண்மனை 1,886 கதவுகள், 1,945 சாளரங்கள், 1,500 அறைகள், 117 படிக்கட்டுகள் இருப்பதாகக் கணக்கிடப்பட்டுள்ளது).[1][2] குளிர்கால அரண்மனையின் மொத்த பரப்பளவு 14.2 எக்டேர் ஆகும்.[3] அரண்மனை அணை, அரண்மனை சதுக்கம் ஆகியற்றிற்கு இடையில், உருசியாவின் முதலாம் பேதுரு மன்னரின் அசல் குளிர்கால அரண்மனை இருந்த இடத்திற்கு அருகில் இவ்வரண்மனை அமைந்துள்ளது. 1730களின் பிற்பகுதிக்கும் 1837க்கும் இடையில் கிட்டத்தட்ட தொடர்ச்சியாகக் கட்டப்பட்டு வந்தது, அப்போது அது தீயினால் கடுமையாக சேதமடைந்து உடனடியாக மீண்டும் கட்டப்பட்டது. சோவியத் ஓவியக் கலைகளிலும், செர்கீ ஐசன்சுடைனின் 1928 ஆம் ஆண்டு அக்டோபர் (உலகையே உலுக்கிய பத்து நாட்கள்) திரைப்படத்திலும் சித்தரிக்கப்பட்டுள்ளபடி, 1917 ஆம் ஆண்டு அரண்மனை மீதான தாக்குதல் அக்டோபர் புரட்சியின் அடையாளமாக மாறியது.

Thumb
அரண்மனை சதுக்கத்தில் இருந்து குளிர்கால அரன்மனை
Thumb
அரண்மனை அணைக்கட்டில் இருந்து குளிர்கால அரண்மனை
Thumb
மேலிருந்து குளிர்கால அரண்மனை

பேரரசர்கள் தங்கள் அரண்மனைகளை உருசிய முடியரசின் வலிமையையும் ஆற்றலையும் பிரதிபலிக்கும் நோக்கில் ஒரு மகத்தான அளவில் கட்டினார்கள். அரண்மனையிலிருந்து, சார் மன்னர்கள்[4] 22,800,000 சதுர கிலோமீட்டர் (8,800,000 சதுர மைல்) பரப்பளவில்[5][6] (பூமியின் நிலப்பரப்பில் கிட்டத்தட்ட 1/6 பங்கு) 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் 125 மில்லியன் குடிமக்களை ஆட்சி செய்தனர். எலிசபெதின் பரோக் பாணியில் அறியப்பட்ட - குறிப்பாக இத்தாலிய பார்த்தலோமியோ ராசுட்ரெல்லி (1700–1771) - பல கட்டிடக் கலைஞர்கள் குளிர்கால அரண்மனையை வடிவமைப்பதில் பங்கேற்றனர். பச்சை, வெள்ளை நிற அரண்மனை ஒரு நீளமான செவ்வகத்தின் ஒட்டுமொத்த வடிவத்தைக் கொண்டுள்ளது, அதன் பிரதான முகப்பு 215 மீட்டர் (705 அடி) நீளமும் 30 மீ (98 அடி) உயரமும் கொண்டது. 1837 திசம்பர் 1 இல் ஏற்பட்ட கடுமையான தீ விபத்தைத் தொடர்ந்து, அரண்மனையின் மறுகட்டமைப்பு வெளிப்புறத்தை மாற்றாமல் விட்டுவிட்டாலும், உட்புறத்தின் பெரும்பகுதி பல்வேறு பாணிகளில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டது, இதனால் அரண்மனை "ரோகோகோ பாணியில் ஈர்க்கப்பட்ட 19 ஆம் நூற்றாண்டின் அரண்மனை" என்று விவரிக்கப்பட்டது.[7]

1905 ஆம் ஆண்டில், ஆர்ப்பாட்டக்காரர்கள் குளிர்கால அரண்மனையை நோக்கி அணிவகுத்துச் சென்றபோது இரத்த ஞாயிறு நிகழ்வுகள் நிகழ்ந்தன, ஆனால் இந்த நேரத்தில் பேரரசரின் குடும்பம் முடியரசின் கிராமம் என அழைக்கப்பட்ட மிகவும் பாதுகாப்பானதும் ஒதுக்குப்புறமானதுமான அலெக்சாந்தர் அரண்மனையில் வசிக்கத் தேர்ந்தெடுத்திருந்தது, முறையான அல்லது அரசு நிகழ்வுகளுக்கு மட்டுமே குளிர்கால அரண்மனைக்குத் திரும்பியது. 1917 பிப்ரவரி புரட்சியைத் தொடர்ந்து, அரண்மனை சிறிது காலம் அலெக்சாண்டர் கெரென்சுகி தலைமையில் செயல்பட்ட உருசிய இடைக்கால அரசாங்கத்தின் இடமாக செயல்பட்டது. அதே ஆண்டின் பிற்பகுதியில், செஞ்சேனை வீரர்கள், கடற்படை வீரர்களின் ஒரு பிரிவு அரண்மனையைத் தாக்கி, இடைக்கால தற்காலிக அரசாங்கத்தை கவிழ்த்தது. பின்னர் இது எர்மித்தாசு அருங்காட்சியகத்துடன் இணைக்கப்பட்டு, பொது மக்களின் பார்வைக்கெனத் திறந்து விடப்பட்டது.

Remove ads

இவற்றையும் பார்க்கவும்

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads