மார்கரட் ஆல்வா

இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia

மார்கரட் ஆல்வா
Remove ads

மார்கரட் அல்வா (Margaret Alva) (பிறப்பு:14 ஏப்ரல் 1942) இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவரது கணவர் மற்றும் மாமியார் வயலட் அல்வா அகியோர் காங்கிரசு கட்சியின் தலைவர்கள் ஆவார். 2022ஆம் ஆண்டு குடியரசுத் துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் மதசார்பற்ற தேசிய முற்போக்கு கூட்டணி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.[1]

விரைவான உண்மைகள் மார்கரட் அல்வா/मार्गरेट अल्वा, 23வது ஆளுநர், குஜராத் மாநிலம் ...
Remove ads

அரசியல்

கட்சிப் பதவிகள்

1975 முதல் 1977 முடிய கர்நாடகா மாநில இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் இணைச் செயலராகவும், 1978 முதல் 1980 முடிய கர்நாடகா மாநில பொதுச்செயலராகவும் பதவியில் இருந்தவர். இவரது மாமியார் வயலெட் அல்வா, இந்திய நாடாளுமன்ற மாநிலங்களவையின் துணைத் தலைவராக செயல்பட்டவர்.[2] 2004 - 2009 ஆண்டுகளிடையே இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியப் பொதுச் செயலராக பணியாற்றியவர்.

நாடாளுமன்றப் பதவிகள்

மார்கரட் ஆல்வா மாநிலங்களவையின் உறுப்பினர் பதவிக்கு 1974, 1980, 1986, 1992 ஆகிய ஆண்டுகளில் நான்கு முறை காங்கிரஸ் கட்சியின் சார்பாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். மாநிலங்களவைத் துணைத் தலைவராகவும், நாடாளுமன்ற விவகாரத் துறை, இளைஞர் நலம் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தில் ராஜங்க அமைச்சராகவும் பணியாற்றியவர்.

ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மனித வள மேம்பாட்டுத் துறையில் கேபினட் தகுதி பெற்ற அமைச்சராக பதவியில் இருந்தவர்.[3]

1999-இல் 13ஆவது மக்களவைக்கு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.[4]

ஆளுநர் பதவியில்

மார்கரட் அல்வா 06 ஆகஸ்டு 2009 5 முதல் ஆகஸ்டு 2014 முடிய உத்தராகண்ட், இராஜஸ்தான், குஜராத், கோவா ஆகிய மாநிலங்களில் ஆளுநராக பதவி வகித்தவர்.[5]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads