மார்க் கார்னி

From Wikipedia, the free encyclopedia

மார்க் கார்னி
Remove ads

மார்க் யோசப் கார்னி (Mark Joseph Carney; பிறப்பு: 16 மார்ச் 1965) என்பவர் கனடிய அரசியல்வாதியும் பொருளியலாளரும் ஆவார். இவர் மார்ச் 2025 முதல் கனடாவின் 24-ஆவது பிரதமராகவும், கனடா லிபரல் கட்சியின் தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் முன்னதாக கனடா வங்கியின் ஆளுநராக 2008 முதல் 2013 வரையும், இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக 2013 முதல் 2020 வரையும் பணியாற்றினார்.

விரைவான உண்மைகள் மார்க் கார்னிMark Carney, 24-ஆவது கனடா பிரதமர் ...

மார்க் கார்னி கனடாவின் வடமேற்கு ஆள்புலத்தில் போர்ட் சிமித் நகரில் பிறந்து ஆல்பர்ட்டா எட்மண்டனில் வளர்ந்தார்.[2] 1988 ஆம் ஆண்டு ஆர்வர்ட் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் இளங்கலைப் பட்டம் பெற்றார்,[3] பின்னர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்து, 1993 இல் முதுகலைப் பட்டமும், 1995 இல் முனைவர் பட்டமும் பெற்றார்.[4] 2003 ஆம் ஆண்டு கனடா வங்கியில் துணை ஆளுநராகச் சேருவதற்கு முன்பு கோல்ட்மேன் சாக்சில் பல்வேறு பதவிகளை வகித்தார்.[5] 2004 ஆம் ஆண்டு, கனடா நிதித் துறைக்கான மூத்த இணை துணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2007 ஆம் ஆண்டு, கார்னி கனடா வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், அங்கு உலகளாவிய நிதி நெருக்கடியின் போது கனேடிய பணவியல் கொள்கைக்கு பொறுப்பேற்றார். 2013 ஆம் ஆண்டு வரை அவர் கனேடிய மத்திய வங்கியை வழிநடத்தினார், பின்னர் அவர் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்டார், அங்கு அவர் பிரித்தானிய மத்திய வங்கியின் பிரெக்சிட்டு, கோவிட்-19 தொற்றுநோயின் தொடக்கக் கட்ட நடவடிக்கைகளுக்குத் தலைமை தாங்கினார்.[6]

மத்திய வங்கியை விட்டு வெளியேறிய பிறகு, கார்னி புரூக்ஃபீல்ட் சொத்து மேலாண்மையில் தலைவராகவும், புளூம்பெர்க் எல்.பி.யின் இயக்குநர்கள் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார்.[7] மார்க் காலநிலை நடவடிக்கை, நிதி ஆகியவற்கான ஐநா சிறப்பு தூதராகவும் நியமிக்கப்பட்டார்.[8] கோவிடு-19 தொற்றுநோய்களின் போது கனடியப் பிரதமர் ஜஸ்டின் துரூடோவின் பல முறைசாரா ஆலோசகர்களில் ஒருவராகவும் கார்னி பணியாற்றினார், செப்டம்பர் 2024 இல் லிபரல் கட்சியின் பொருளாதார வளர்ச்சி பணிக்குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டார். 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், கனடாவின் லிபரல் கட்சியின் தலைமைப் பதவியை நாடுவதற்கான தனது விருப்பத்தை அவர் அறிவித்தார், மார்ச் மாதத்தில் நடைபெற்ற தலைவர் தேர்தலில் பெரும் வெற்றியைப் பெற்றார்.[9] 2025 மார்ச் 14 அன்று கனடாவின் 24-ஆவது பிரதமராக 30-ஆவது கனேடிய அமைச்சரவையுடன் கார்னி பதவியேற்றார்.[10][11][12]

Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads