மார்ட்லெட் நடவடிக்கை
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்ட்லெட் நடவடிக்கை (Operation Martlet) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு போர் நடவடிக்கை. இது பிரான்சின் கான் நகரைக் கைப்பற்ற நடந்த முயற்சிகளில் ஒன்றான எப்சம் நடவடிக்கையின் ஒரு பகுதியாகும். இது டாண்ட்லெஸ் நடவடிக்கை (Operation Dauntless) என்றும் அழைக்கப்படுகிறது.
பிரான்சு மீதான நேச நாட்டு கடல்வழிப் படையெடுப்பு நார்மாண்டியில் ஜூன் 6, 1944ல் தொடங்கியது. அதன் இலக்குகளில் ஒன்று கான் நகரைக் கைப்பற்றுவதாகும். பிரான்சின் உட்பகுதிக்கு முன்னேற கான் நகரைக் கட்டுப்பாட்டில் கொண்டு வருவது அவசியம் என்பதால் அதனைக் கைப்பற்ற நேச நாட்டுப் படைகள் தொடர் கான் சண்டை முயற்சிகளை மேற்கொண்டன. அவற்றுள் ஒன்று எப்சம் நடவடிக்கை. இந்த நடவடிக்கையில் கான் நகரின் அருகிலுள்ள ஓடோன் பள்ளத்தாக்கைக் கைப்பற்ற பிரிட்டானிய 8வது கோர் முயற்சி செய்தது. 30வது கோரின் தாக்குதலை மறைத்து ஜெர்மானியர்களின் கவனத்தைத் திசைதிருப்ப மார்ட்லெட் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 8வது கோரின் தாக்கச்சு (attack axis)க்கு பக்கவாட்டு பாதுகாப்பு (flank security) அளிக்கும் பொறுப்பு பிரிட்டானிய 49வது காலாட்படை டிவிசனுக்கு வழங்கப்பட்டது. இதற்காக ராரே முகட்டினையும் அதை சுற்றியிருந்த கிராமங்களையும் கைப்பற்ற ஜூன் 26ம் தேதி 49வது டிவிசன் முன்னேறத் தொடங்கியது. 8வது கோரின் பக்கவாட்டினைப் பாதுகாக்கத் தவறி விட்டாலும் ஒரு வாரகால சண்டைக்குப் பின்னர் ராரே முகட்டுப் பகுதியைக் கைப்பற்றி நேசநாட்டுப் படைகளின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்தது.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads