மார்வெல் ஒன்-சாட்சு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மார்வெல் ஒன்-சாட்சு அல்லது மார்வெல் ஒன்-ஷாட்ஸ் (ஆங்கிலம்: Marvel One-Shots) என்பது 2011 முதல் 2014 வரை மார்வெல் இசுடியோசு நிறுவனத்தால் மார்வெல் திரைப் பிரபஞ்சத்தில் அமைக்கப்பட்ட நேரடி-காணொளி குறும்படங்களின் தொடர் ஆகும்.[1]
இது மார்வெல் திரைப் பிரபஞ்சத் திரைப்படங்களில் அறிமுகப்படுத்தப்படும் கதாபாத்திரங்கள் அல்லது நிகழ்வுகளுக்கு அதிக பின்னணியை கொண்ட கதைகளாக வடிவமைக்கப்பட்டு 3 முதல் 15 நிமிடங்கள் வரையில் வெளியானது.
இதன் முதல் குறும் படமாக 'தி கன்சல்டன்ட்' ஆகும். இது ஷீல்ட் என்ற தொடரில் கிளார்க் கிரெக் ஏஜென்ட் என்ற கதாபாத்திரத்தில் நடித்த கிளார்க் கிரெக் என்பவரை பற்றி கதை உருவாக்கி செப்டம்பர் 13, 2011 இல் வெளியானது. அதை தொடர்ந்து அக்டோபர் 25, 2011 இல் 'ஆ பணி திங் ஹப்பென்டெட் ஒன தி வே டு தோர் ஹாம்மேர்'[2] என்ற குறும் படத்திலும் இவரே நடித்துள்ளார். ஐட்டம் 47 (2012) படத்தில் மார்வெல் தி அவேஞ்சர்ஸ் நிகழ்வுகளுக்குப் பிறகு கைவிடப்பட்ட சிட்டாரி துப்பாக்கியைக் கண்டுபிடிப்பது போன்ற கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதில் அதிர்ஷ்ட ஜோடியாக லிஸி கப்லன் மற்றும் ஜெஸ்ஸி பிராட்போர்டு ஆகியோர் நடித்துள்ளனர். 2013 இல் ஏஜென்ட் கார்ட்டர்[3] வெளியானது. இது கேப்டன் அமெரிக்கா: முதல் அவெஞ்சர் இன் நிகழ்வுகளுக்குப் பிறகு பெக்கி கார்டராக ஹேலி அட்வெல் நடித்தார்,[4] அதே சமயம் ஆல் ஹெயில் தி கிங் (2014) அயர்ன் மேன் 3 இன் நிகழ்வுகளுக்குப் பிறகு ட்ரெவர் ஸ்லேட்டரியாக பென் கிங்ஸ்லி நடித்தார்.
Remove ads
வளர்ச்சி
ஆகஸ்ட் 2011 இல், மார்வெல் நிறுவனம் தன்னியக்கக் கதைகளாக வடிவமைக்கப்பட்ட இரண்டு குறும்படங்ககளை நேரடியாக காணொளியில் வெளியிடப்படும் என்று அறிவித்தது. இணை தயாரிப்பாளரான பிராட் வின்டர்பாம், "புதிய கதாபாத்திரங்கள் மற்றும் யோசனைகளை பரிசோதிக்க இது ஒரு வேடிக்கையான வழியாகும், ஆனால் மிக முக்கியமாக இது மார்வெல் திரைப் பிரபஞ்சத்தை விரிவுபடுத்துவதற்கும், எங்கள் அம்சங்களின் கதைக்களத்திற்கு வெளியே வாழும் கதைகளை கூறுவதற்கும் ஒரு வழியாகும்" என கூறினார்.
முதல் இரண்டு படங்களும் தி எபலிங் குழுமத்துடன் இணைந்து லேய்தம் இயக்கத்தில் மற்றும் எரிக் பியர்சன் எழுத்தில் தயாரிக்கப்பட்டன. அதை தொடர்ந்து 2012 இல் ஐட்டம் 47, 2013 இல் ஏஜென்ட் கார்ட்டர்[5] மற்றும் 2014 இல் ஆல் ஹெயில் தி கிங் போன்ற படங்கள் வெளியானது.
Remove ads
திரைப்படங்கள்
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads