மாலத்யா மாகாணம்

From Wikipedia, the free encyclopedia

மாலத்யா மாகாணம்
Remove ads

மாலத்யா மாகாணம் (Malatya Province, துருக்கியம்: Malatya ili , Kurdish ) என்பது துருக்கியின் ஒரு மாகாணம் ஆகும். இது ஒரு பெரிய மலைப் பகுதியின் பகுதியாக உள்ளது. மாகாணத்தின் தலைநகர் மாலத்தியா ( இட்டைட்டு மொழியில் : மிலிட் அல்லது மால்டி, அதாவது "தேன் நகரம்" என்பது பொருளாகும்) ஆகும். மாலத்யா பாதாமி பழங்களுக்கு பிரபலமானது. மாலத்யா மாகாணத்தின் பரப்பளவு 12,313 கி.மீ.² ஆகும். 2000 ஆண்டைய மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகளின்படி மாலத்யா மாகாணத்தின் மக்கள் தொகை 853,658 ஆகும். அதே நேரத்தில் 2010 இல் மக்கள் தொகையானது 740,643 என இருந்தது. மாகாண தலைநகரமாக விளங்கும் நகரம் மாலத்தியா ஆகும். இந்த நகரம் 426,381 (2010) மக்கள்தொகை கொண்டதாகும்.

விரைவான உண்மைகள் மாலத்யா மாகாணம் Malatya ili, நாடு ...
Remove ads

மாவட்டங்கள்

மாலத்யா மாகாணம் 14 மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது (தலைநகர் மாவட்டம் தடித்து காட்டபட்டுள்ளது):

  • அகாதா
  • அராப்கீர்
  • அர்குவன்
  • பட்டல்காசி
  • டேரண்டே
  • டோசனெஹிர்
  • டோசனியோல்
  • ஹெக்கிமான்
  • காலே
  • குலுன்காக்
  • மாலத்யா
  • புட்ருகே
  • யசஹான்
  • யெசிலியர்ட்

உள்ளூர் தளங்கள்

  • யுனோனு பல்கலைக்கழகம் (1975 முதல்)
  • துர்கட் ஏசல் மருத்துவ மையம் (யுனோனு பல்கலைக்கழகத்தில்)
  • மாலத்யா எர்ஹாஸ் வானூர்தி நிலையம் (குடிமை மற்றும் இராணுவ சேவை)
  • எஸ்கிமலாத்யா (பழைய தலை நகரம், மிகவும் வரலாற்று இடம்)

குறிப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads