மாலிப்டினம் மூவாக்சைடு
வேதிச் சேர்மம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாலிப்டினம் மூவாக்சைடு (Molybdenum trioxide) என்பது MoO3 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும், எந்தவொரு மாலிப்டினம் சேர்மத்திலிருந்தும் மாலிப்டினம் மூவாக்சைடை பெருமளவில் தயாரிக்க முடியும். ஆக்சிசனேற்ற வினையூக்கியாகச் செயற்படுவது இச்சேர்மத்தினுடைய முதன்மையான பயன்பாடு ஆகும். மேலும் பிற மாலிப்டினம் சேர்மங்களைத் தயாரிக்கவும் இது பயன்படுகிறது.
மாலிப்டினம் மூவாக்சைடில் மாலிப்டினம் +6 ஆக்சிசனேற்ற நிலையில் காணப்படுகிறது.
Remove ads
கட்டமைப்பு

வாயுநிலை, மாலிப்டினம் மூவாக்சைடில் மைய மாலிப்டினம் அணுவுடன் மூன்று ஆக்சிசன் அணுக்கள் இரட்டைப் பிணைப்பால் பிணைந்துள்ளன. திண்மநிலையில், நீரற்ற MoO3 சேர்மமானது சாய்சதுரப் படிகத்தில் உருத்திரிந்த MoO6 எண்முகங்களைக் கொண்டுள்ளது. விளிம்புகளுடன் பகிர்ந்து கொள்ளும் எண்முகங்கள் சங்கிலிகளாக உருவாகின்றன. இச்சங்கிலிகள் ஆக்சிசன் அணுக்களுடன் குறுக்கில் பிணைந்து அடுக்குகளை உருவாக்குகின்றன. ஒரு மாலிப்டினம் – ஆக்சிசன் பிணைப்பு குறைவாக உள்ள பிணைக்கப்படாத ஆக்சிசன் எண்முகத்தில் உள்ளது. [1]
Remove ads
தயாரிப்பு
முதன்மைத் தாதுவான மாலிப்டினம் இரு சல்பைடை காற்றில் வறுப்பதன் மூலம் மாலிப்டினம் மூவாக்சைடு தொழில்முறையில் தயாரிக்கப்படுகிறது.
2 MoS2 + 7 O2 → 2 MoO3 + 4 SO2
நீரிய சோடியம் மாலிப்டேட்டு கரைசலுடன் பெர்குளோரிக் அமிலத்தை சேர்த்து அமிலமாக்கல் வினைக்கு உட்படுத்தி ஆய்வகங்களில் மாலிப்டினம் மூவாக்சைடு தயாரிக்கப்படுகிறது. :[2]
Na2MoO4 + H2O + 2 HClO4 → MoO3(H2O)2 + 2 NaClO4
இவ்வினையில் உருவாகும் இருநீரேற்று விரைவாக நீரை இழந்து ஒருநீரேற்று வடிவ மாலிப்டினம் மூவாக்சைடு உருவாகிறது. இவ்விரண்டு நீரேற்றுகளும் அடர்த்தியான மஞ்சள் நிறத்தில் காணப்படுகின்றன.
தண்ணீரில் மாலிப்டினம் மூவாக்சைடு சிறிதளவு கரைந்து மாலிப்டிக் அமிலத்தைத் தருகிறது. காரங்களுடன் சேர்ந்து மாலிப்டேட்டு எதிர்மின் அயனியை தருகின்ற நிலையிலில் மாலிப்டினம் மூவாக்சைடு இருக்கிறது.
Remove ads
பயன்கள்
பெருமளவில் மாலிப்டினம் உலோகத்தைத் தயாரிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது. அரிமானத்தைத் தடுப்பதற்காக எஃகுடன் சேர்த்து கலப்புலோகம் தயாரிப்பதற்கு மாலிப்டினம் பெரிதும் உதவுகிறது. மாலிப்டினம் மூவாக்சைடுடன் ஐதரசன் சேர்த்து உயர்வெப்பநிலைக்கு சூடுபடுத்தும் போது மாலிப்டினம் உலோகம் கிடைக்கிறது.
MoO3 + 3 H2 → Mo + 3 H2O
தொழிற்சாலைகளில் புரப்பீன் மற்றும் அமோனியாவை ஆக்சிசனேற்றம் செய்து அக்ரைலோநைட்ரைல் தயாரிக்கையில் மாலிப்டினம் மூவாக்சைடு இணை வினையூக்கியாக செயல்படுகிறது.
அடுக்குக் கட்டமைப்பு மற்றும் Mo(VI)/Mo(V) இனச்சேர்க்கை எளிமை காரணமாக மாலிப்டினம் மூவாக்சைடு மின்வேதியியல் கருவிகள் மற்றும் மின்வேதியியல் வெளிப்பாடுகளில் பயன்படுகிறது [3]. பல்படிமங்களில் ஒரு வலிமையான நுண்ணுயிர் எதிர்ப்பு முகவராகவும் மாலிப்டினம் மூவாக்சைடு பரிந்துரைக்கப்படுகிறது. தண்ணீருடன் தொடர்பு கொள்ள நேரும்போது H+ அயனிகளை உருவாக்கி பாக்டீரியாக்களை அழிக்க மாலிப்டினம் மூவாக்சைடு பயன்படுகிறது. [4]

மேற்கோள்கள்
புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads