மாவலி (கம்பன் காட்சி)

From Wikipedia, the free encyclopedia

Remove ads

மாவலி என்பவன் வரலாற்றைக் கம்பராமாயணம் குறிப்பிடுகிறது. தன் வேள்விக்குத் துணை புரியுமாறு இராமனையும் இலக்குவனையும் அழைத்துக்கொண்டு விசுவாமித்திர முனிவன் சென்றான். வழியில் இருந்த சோலை ஒன்றினைப் பார்த்து அதனைப்பற்றி இராமன் முனிவரிடம் வினவினான். முனிவன் அந்தச் சோலையைப் பற்றிக் கூறும்போது மாவலி வரலாற்றைக் கூறுகிறான். [1] புராணங்களில் இவன் பெயர் பகாபலி என்று உள்ளது. கதைப்போக்கும் வேறாக உள்ளது.

மாவலி வரலாறு

மாவலி என்னும் மன்னன் உலகினைத் தூக்கும் ஆண்பன்றி போன்ற வலிமை படைத்தவன். [2] இவன் வானவர் வேள்வி செய்ய விடாமல் தடுத்தான். [3]
அதனால் தேவர்கள் திருமாலை வணங்கிக் காக்குமாறு வேண்டிக்கொண்டனர். [4]
திருமால் ஆலம் விதை போலக் குறள் வடிவம் கொண்டவராக, காசிபன் அதிதி ஆகியோரிக்கு மகனாகப் பிறந்தார். [5]
அந்தணன் கோலத்தில் மாவலியிடம் வந்தார். [6]

முகமன்

வாமணன் வந்தது கண்டு மாவலி எதிர் சென்று வரவேற்றான். “உன்னைக் காட்டிலும் சிறந்த அந்தணர் இல்லை; என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் இல்லை!” என்று வாமணனிடம் கூறினான். [7]
அதனைக் கேட்ட வாமணன் “நீண்ட கையை உடையவனே! உன்னிடம் ஏதாவது ஒன்றை விரும்பி வந்தவர் பெறாமல் திரும்பியது இல்லை” என்றான். [8]
மகிழ்ச்சி கொண்ட மாவலி “என்ன செய்யவேண்டும்” என வினவினான். “மூன்று அடி மண் இருக்குமானால் தருக” என்றான் வாமணன். உடனே வாமணன் “தந்தேன்” என்றான். [9]

அமைச்சன் எச்சரிக்கை

மாவலியின் அமைச்சன் சுக்கிராச்சாரியார் “இது வஞ்சகம்; வந்தவன் குறளன் அல்லன்; அண்டம் முற்றும் அகண்டு கிடப்பவன்; முன்பொரு காலத்தில் உலகையே விழுங்கியவன்” என்று கூறி மாவலியை எச்சரித்தார். [10]

மாவலியின் ஈகைக்குணம்

“கொடுக்க நிமிர்ந்த கை தாழாது. கொடுப்பதை விட எனக்கு என்ன நன்மை இருக்கிறது” என்று மாவலி கூறினான். [11]
என்னினும் உயர்ந்தவர் ஒருவர் என்னிடம் தானம் பெறுவாராயின் என்னைக் காட்டிலும் உயர்ந்தவர் யார் – என்றான் மாவலி [12]
உயிரைக் கேட்டாலும் கொடுப்பது நன்று; கொள்வதுதான் தீயது – என்றான். [13]
ஈந்தவரே மேலானவர். இந்த உலகில் நிலையாக இருந்தவர் யார்? என்று மாவலி வினவினான் [14]
தானம் கேட்டு வருபவர் பழி உண்டாக்குபவர் அல்லர். கொடுப்பவரைத் தடுப்பவரே பகைவர் என்றான் மாவலி. [15]
கையில் உள்ளபோதே கொடுத்தல் அறம். தடுப்பது உலோபம் என்று மேலும் கூறினான். [16]

ஈதல்

இவ்வாறெல்லாம், அமைச்சன் கூற்றைத் தடுத்துக் கூறிய மாவலி, “உன் காலடிகளால் மூன்று அடி அளந்துகொள்க” என்று கூறிக்கொண்டு வாமணன் கையிலிருந்த கண்டிகை நீரை வாங்கித் தாரை வார்ந்தான். [17]
மாவலி தாரை வார்த்த நீர் கையில் பட்டதும் வாமணன் வியப்பும் அச்சமும் கொள்ளுமாறு வானளாவ உயர்ந்தான். உயர்ந்தவர்க்குச் செய்த உதவி பெரிதாவது போல உயர்ந்தான். [18]
அளக்க உயர்ந்த கால் வானுலகம் மண்ணுலகம் அனைத்தையும் இரண்டு தப்படிகளால் அளந்துவிட்டது. [19]
வானளாவ உயர்ந்த குறளன் மூன்றாவது தப்படிக்கு மாவலியின் தலைமேல் வைத்து அளந்துகொண்டான். [20]
மாவலி பிடுங்கிக்கொண்ட இந்தச் சோலையை இந்திரனுக்குக் கொடுத்துவிட்டுத் திருமால் பாற்கடலில் பள்ளிகொள்ளச் சென்றுவிட்டார். அவரது காலடிகளைத் திருமகளின் கைகள் சிவந்து காட்டுகின்றன. [21]

Remove ads

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads