வராக அவதாரம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
வராக அவதாரம் (Varaha) என்பது விஷ்ணுவின் மூன்றாம் அவதாரம் ஆகும். இதில் இவர் காட்டுப்பன்றி (வராகர்) அவதாரம் எடுத்தார். பூமியைக் கைப்பற்றிக் கடலுக்கடியில் எடுத்துச் சென்ற இரணியகசிப்புவின் தம்பியான இரண்யாட்சன் என்ற அசுரருடன், வராக அவதாரத்தில், விஷ்ணு, ஆயிரம் ஆண்டுகள் போர் செய்து, இரண்யாட்சனை கொன்று விட்டு, அவர் பூமியை துக்கி கொண்டு வந்து சூரியக் குடும்பத்தில் அதை வைத்தார்.[1] சதபத பிராமணம், தைத்தர்ய ஆரண்யகம், இராமாயணம் போன்ற இலக்கியங்களில் இந்த அவதாரத்தினைப் பற்றிக் கூறப்பட்டுள்ளது.[1] வராக அவதாரம் என்பதை ஆதி வராகம், யக்ஞ வராகம், பிரளய வராகம் என்று மூன்றாக பிரித்துள்ளனர். இந்தப் பிரிவு, அதன் வடிவத்திற்கேற்ற படி பிரிக்கப்பட்டுள்ளது.[1] விஷ்ணு கட்டுப்பன்றி உருவில் ஏழு உலக மண்ணையும் இடறிப் பார்த்தது மட்டுமில்லாமால், அவர் சிவனை ஒரு நெருப்பு தூணாக இலிங்கோத்பவர் என்று அவர் உருவம் எடுத்த போது அவரின் அடியை கண்டுபிடித்து மற்றும் அவரையும், பிரம்மனை ஒரு அன்னமாக ஹம்சர் என்று அவர் உருவம் எடுத்த போது அவரையும், பூமியையும் சேர்த்து மூவரையும் தன் தந்தங்களால் தூக்கி எடுத்து அவர் தான் பரப்பிரம்மன் என்று நிரூபித்தார் எல்லோருக்கும்.[2]

Remove ads
கோயில்களில் வராக அவதாரம்
ஏரான் எனும் மத்தியப் பிரதேசத்தில் அமைந்துள்ள இடத்தில் குப்தர்கள் காலத்து வராக அவதாரத்தின் படிமம் உள்ளது. இதுவே தற்போது இருக்கும் படிமங்களில் தொன்மையானது.[1] மாமல்லபுரத்தில் ஆதி வராகம் சிலை குடவரையாக செதுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் இருப்பது பொ.ஊ. 7 மற்றும் பொ.ஊ. 8 ம் நூற்றாண்டைச் சேர்ந்ததாக உண்டு.[1]
காஞ்சிபுரம் கைலாசநாதர் கோயில், திருப்பரங்குன்றம் முருகன் கோயில் ஆகியவற்றில் குடவரையாக வராக அவதாரம் சிலைகள் உள்ளது. இவை பல்லவர்கள் மற்றும் சோழர்கள் காலத்தில் அமைக்கப்பட்டதாகும்.[1]
Remove ads
கருவி நூல்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads