மாவோரி
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாவோரிகள் (Māori) எனப்படுபவர் நியூசிலாந்து நாட்டில் வசிக்கும் பழங்குடி மக்கள். இவர்கள் கிழக்கு பொலினீசியாவிலிருந்து வந்தவர்கள். இவர்கள் மாவோரி மொழியைப் பேசுகிறார்கள். 19 நூற்றாண்டில் ஐரோப்பியர்களின் வருகையால் மாவோரி அரசுகள் வீழ்ச்சியடைந்தன. ஐரோப்பாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய வகை நோய்களுக்கு எதிர்ப்பு சக்தி இல்லாமையால் மாவோரிகளின் மக்கள்தொகை 1840 இற்குப் பிறகு பெருமளவு குறைந்தது. 19ம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து மீண்டும் மாவோரிகளின் எண்ணிக்கை கூடத்தொடங்கியது. 1960களிலிருந்து மாவோரி சமூகத்திலும் பண்பாட்டிலும் மறுமலர்ச்சி ஏற்பட்டது.


Remove ads
தமிழர்களும் மாவோரிகளும்
மாவோரிகள் தங்கள்து முன்னோர்கள் கடல் கடந்து பல பயணங்கள் மேற்கொண்டதாக கூறுவர். இதே கருதுகோள் மற்ற பாலினேசிய பழங்குடிகளுக்கும் உண்டு.[6] இம்மாவோரிகள் பேசும் மாவோரி மொழிக்கும் தமிழுக்கும் பலவித் தொடர்புகள் உள்ளதாக டெய்லர் என்னும் பாதிரியார் கண்டறிந்துள்ளார்.[7] இதற்கு மேலும் வலு சேர்க்கும் விதமாக தமிழ் எழுத்துக்களால் பொறிக்கப்பட்ட வெண்கல மணி ஒன்று நியுசிலாந்து கரியோரா கிராமத்தில் கண்டறியப்பட்டது. இம்மணியைக் கொண்டு வந்த கப்பல் தேக்கு மரத்தால் செய்யப்பட்டது. இதனால் கடல் கடந்து தன் முன்னோர்கள் பயணித்ததாக கூறும் மாவாரிகளுக்கும் தமிழ் மணி நியுசிலாந்தில் கிடைத்துளதால் தமிழருக்கும் அதிக தொடர்புண்டு என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுவதுண்டு.
Remove ads
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads