நியூசிலாந்து நாடாளுமன்றம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நியூசிலாந்து நாடாளுமன்றம் (New Zealand Parliament; Māori: Pāremata Aotearoa) என்பது நியூசிலாந்தின் சட்டவாக்க அவை ஆகும். இது இது நியூசிலாந்து அரசரையும், நியூசிலாந்து பிரதிநிதிகள் அவையையும் கொண்டது. அரசர் பொதுவாகத் தனது ஆளுநரைப் பிரதிநிதியாகக் கொண்டு செயல்படுகிறார்.[2] 1951 இற்கு முன்னர், நியூசிலாந்தின் சட்டவாக்கப் பேரவையாக ஒரு மேலவையும் இருந்தது. நியூசிலாந்து நாடாளுமன்றம் 1854 இல் உருவாக்கப்பட்டது. உலகின் மிகவும் பழமையான இன்றும் தொடர்ந்தியங்கும் ஒரு சட்டவாக்க அவைகளில் ஒன்றாக இது விளங்குகிறது.[3] 1865 முதல் நாடாளுமன்றம் நியூசிலாந்து தலைநகரம் வெலிங்டனில் இருந்து இயங்குகிறது.
நாடாளுமன்றத்தின் பிரதிநிதிகள் அவை பொதுவாக 120 நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருக்கும். ஆனாலும், சிலவேளைகளில் மேலதிக இடங்களும் ஒதுக்கப்படுகின்றன. 71 உறுப்பினர்கள் தொகுதிகளில் இருந்து நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். ஏனையோர் கட்சி பெற்ற மொத்த வாக்குகளின் அடிப்படையில் கட்சிப் பட்டியல் உறுப்பினர்களில் இருந்து தேர்ந்தெடுக்கபப்டுகின்றனர். மாவோரி பழங்குடிகளின் பிரதிநிதிகள் 1867 முதல் நாடாளுமன்றத்தில் உறுப்புரிமை கொண்டுள்ளனர். 1893 இல் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப் பெற்றனர்.[3] மூன்று ஆண்டுகளுக்கு முன்னரே நாடாளுமன்றம் கலைக்கப்படலாம் என்றாலும், பொதுவாக மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டு புதிய தேர்தல்கள் நடத்தப்படுகின்றன.
நாடாளுமன்றம் செயலாக்குநருடன் நெருக்கமாகத் தொடர்புடையது. நியூசிலாந்து அரசாங்கம் ஒரு பிரதமர் (அரசுத்தலைவர்) மற்றும் பிற அமைச்சர்களைக் கொண்டுள்ளது. பொறுப்பான அரசாங்கத்தின் கொள்கைக்கு இணங்க, இவர்கள் எப்போதும் பிரதிநிதிகள் அவையிலிருந்து தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். அதற்காக அவர்கள் பொறுப்புக் கூறப்படுவார்கள்.
சட்டவாக்க செயல்பாட்டில் மன்னரோ (தற்போது ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாம் சார்லசு மகாராசா) அல்லது அவரது பிரதிநிதியான ஆளுநரோ பங்கெடுக்க மாட்டார்கள். அரசரின் இசைவை வழங்குவது என்று அழைக்கப்படும் சபை நிறைவேற்றிய சட்ட முன்வரைவுக்கு அரசரின் ஒப்புதலைத் தருவது, சட்ட முன்வரைவு ஒரு சட்டமாக்கப்படுவதற்கு அவசியமானதாகும்.[2] புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் உறுப்புரிமையை ஏற்றுக் கொள்வதற்கு முன்னர் அரசரின் முடிவை ஏற்றுக் கொள்வதாக சத்தியப்பிரமாணம் செய்ய வேண்டும். இதனால் சட்ட முன்வரைவு தொடர்பான அரசரின் முடிவுக்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அரசரின் தங்கள் விசுவாசத்தை வெளிப்படுத்தி, அவரது முடிவை ஏற்றுக்கொள்ள வேண்டும்.[4] அதிகாரபூர்வ எதிர்ப்பு என்பது பாரம்பரியமாக அரசரின் மாட்சிமை விசுவாச எதிர்ப்பு என்று அழைக்கப்படுகிறது.[5]
Remove ads
உசாத்துணைகள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads