மாஸ்டர்
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 2021 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
Remove ads
மாஸ்டர் (Master) (மொ.பெ. வாத்தியார்) என்பது 2021 ஆம் ஆண்டு வெளியான தமிழ் மொழி சண்டை பரபரப்பூட்டும் திரைப்படம் ஆகும்.[1] லோகேஷ் கனகராஜ் என்பவர் எழுதி மற்றும் இயக்க சேவியர் பிரிட்டோ, சுனே ஆகியோர் தயாரித்துள்ளனர்.
இந்தத் திரைப்படத்தில் விஜய், விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன் ஆகியோர் முக்கியக் கதாப்பத்திரத்தில் நடித்துள்ளார்கள். அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கான ஒளிப்பதிவு சத்யன் சூரியன் மற்றும் படத்தொகுப்பு பிலோமின் ராஜ். இந்த படம் 2021 ஜனவரி 13 அன்று வெளியானது.
Remove ads
நடிகர்கள்
- விஜய்[2] – ஜான் "ஜே.டி" துரைராஜ்
- விஜய் சேதுபதி – பவானி
- அர்ஜுன் தாஸ்[3] – தாஸ்
- ஆண்ட்ரியா ஜெரெமையா[4] — வானதி
- மாளவிகா மோகனன்[5] – சாரு (எ) சாருலதா
- சாந்தனு பாக்யராஜ்[6] – பர்கவ்
- நாசர்[7]
- சஞ்சீவ்
- ஸ்ரீநாத்
- சிறீமன்
- நாகேந்திர பிரசாத்[8][9]
- தீனா[10]
- ரம்யா சுப்பிரமணியன்
- ரமேஷ் திலக்[11]
- பிரேம்[12]
- அழகம்பெருமாள்[13]
- சேத்தன்
- ராகுல் கண்ணன்
- சௌந்தர்யா நந்தகுமார்[14]
- கௌரி கிஷான்
- பிரிகடா சாகயா[15]
- லிண்டு ரோனி[16]
- சுனில் ரெட்டி[17]
- மேக் எல் நாத்[18]
Remove ads
ஒலிப்பதிவு
இந்த படத்திற்கான இசை அனிருத் ரவிச்சந்திரன் இசையமைத்துள்ளார். முதல் பாடல் விஜய் பாடிய 'குட்டி ஸ்டோரி', இது பிப்ரவரி 14, 2020 அன்று வெளியிடப்பட்டது.
தமிழ்
Remove ads
தயாரிப்பு
ஆகஸ்ட் 2019 இல் சேவியர் பிரிட்டோ தயாரிக்கும் படத்தில் விஜய்யுடன் இணைந்து பணியாற்றப்போவதாக இயக்குநர் லோகேஷ் கனகராஜ் டுவிட்டரில் பதிவு செய்துள்ளார். இந்தச் செய்தியுடன் படத்தில் அனிருத் ரவிச்சந்திரன் இசை இயக்குனராகவும், சில்வா சண்டை இயக்குனராகவும், சத்யன் சூரியன் மற்றும் பிலோமின் ராஜ் ஆகியோர் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்றப்போவதாகக் குறிப்பிட்டுள்ளார்.[19]
மற்ற நடிகர்களாக மாளவிகா மோகனன்,[20] சாந்தனு பாக்யராஜ் மற்றும் ஆண்டனி வர்கீஸ் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டனர். ஆண்டனி வர்கீஸ் இந்தத் திரைப்படத்தின் மூலம் தமிழ் திரைப்படத் துறைக்கு அறிமுகமாக இருந்தார். ஆனால் சில காரணங்களால் இந்தத் திரைப்படத்திலிருந்து விலக,[21] கைதி திரைப்பட வில்லன் அர்ஜுன் தாஸ் என்பவர் இவரின் கதாபாத்திரத்திற்குத் தேர்வு செய்யப்பட்டு ஒப்பந்தம் செய்யப்பட்டார்.[22]
அக்டோபர் 2019 அன்று மேயாத மான் (2017) மற்றும் ஆடை (2019) ஆகியவற்றை இயக்கிய இயக்குநர் ரத்ன குமார் என்பவர் லோகேஷுடன் சேர்ந்து இந்தத் திரைப்படத்திற்கான திரைக்கதையை இணைந்து எழுதுவதாக டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.[23]
சந்தைப்படுத்தல்
இந்தத் திரைப்படத்திற்கான முதல் சுவரொட்டி டிசம்பர் 31, 2019 இல் புத்தாண்டு அன்று படத்தின் அதிகாரப்பூர்வ தலைப்புடன் வெளியிடப்பட்டது.[24]
இரண்டாவது சுவரொட்டி ஜனவரி 15, 2020 தைப்பொங்கல் தினத்தில் வெளியிடப்பட்டது.[25] மூன்றாவது சுவரொட்டி ஜனவரி 26, 2020 இந்திய குடியரசு தினத்தில் வெளியிடப்பட்டது.[26]
முதல் ஒற்றை பாடல் "குட்டி ஸ்டோரி" என்று பெயரிடப்பட்டு பிப்ரவரி 14 ஆம் தேதி வெளியானது. இந்தப் பாடலை விஜய் மற்றும் அனிருத் ரவிச்சந்திரன் இணைந்து பாடியுள்ளார்கள். இந்தப் பாடலின் வரிகள் 90 சதவீதம் ஆங்கிலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.[27]
Remove ads
சர்ச்சை
பிப்ரவரி 7, 2020 அன்று நெய்வேலியில் மாஸ்டர் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்த தருணத்தில் பாரதிய ஜனதா கட்சியைச் (பிஜேபி) சேர்ந்த சுமார் 20 உறுப்பினர்கள் திரைப்படத்தளத்திற்கு முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். படப்பிடிப்புக்கு அனுமதி வழங்கியதற்காக என்.எல்.சி நிர்வாகத்திற்கு எதிராக பாஜக உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.[28] படக்குழுவினர் படப்பிடிப்புக்கு அனுமதி பெற்றிருந்தாலும், இது மிகவும் பாதுகாப்பற்ற பகுதி என்றும், இது ஒரு திரைப்படப் படப்பிடிப்புக்கான இடம் அல்ல என்றும் படப்பிடிப்பு நிறுத்தப்படாவிட்டால் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்பதாகவும் பாஜக உறுப்பினர்கள் கூறினர்.[29]
நடிகருக்கு ஆதரவாக ரசிகர்கள் பலர் வரத் தொடங்கினர் மற்றும் கட்சி ஊழியர்களுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். எதிர்ப்பாளர்களும் ரசிகர்களும் காவல்துறையினரின் தலையீட்டிற்குப் பிறகு வெளியேறினர்.[30]
Remove ads
மேற்கோள்கள்
வெளிப்புற இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads