இந்தியன் 2

2024 தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia

இந்தியன் 2
Remove ads

இந்தியன் 2 (Indian 2) 2024 இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். இயக்குநர் ஷங்கர் இயக்கிய இப்படத்தை சுபாஷ்கரன் அல்லிராஜாவின் லைக்கா தயாரிப்பகம் தயாரித்தது. இத்திரைப்படம் 1996 ஆம் ஆண்டில் வெளியான இந்தியன் திரைப்படத்தின் தொடர்ச்சியாக வெளிவந்தது. கமல்ஹாசன், காஜல் அகர்வால் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். சேனாதிபதியாக கமல்ஹாசன் தொடர்கிறார். அனிருத் பாடல்கள், பின்னணி இசை ஆகியவற்றிற்கு இசையமைத்திருந்தார். ஆர். ரத்னவேலு ஒளிப்பதிவை மேற்கொண்டார். ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்தார். இத்திரைப்படத்தின் தொலைக்காட்சி உரிமையை சன் தொலைக்காட்சி நிறுவனம் பெரிய தொகைக்கு வாங்கியுள்ளது.[1]

விரைவான உண்மைகள் இயக்கம், தயாரிப்பு ...
Remove ads

நடிப்பு

தயாரிப்பு

இத்திரைப்படத்தின் தயாரிப்புப் பணிகளைப் பற்றி 2017 இல் பிக் பாஸ் தமிழ் முதல் நிகழ்வின் போது தகவல் வெளிவந்தது. 2018 ஆம் ஆண்டு கமல்ஹாசனின் பிறந்த நாளான நவம்பர் 7 அன்று இத்திரைப்படம் லைக்கா தயாரிப்பகத்தால் தயாரிக்கப்பட இருப்பதாக அதிகாரபூர்வ செய்தி வெளிவந்தது.[5][6][7] இத்திரைப்படத்திற்கான வசனம் ஜெயமோகன், கபிலன் வைரமுத்து, லெட்சுமி சரவணக்குமார் ஆகியோரால் எழுதப்பட்டது.[8][9] இயக்குநர் ஷங்கர் இப்படத்தின் படப்பிடிப்பு திசம்பர் 2018 இல் தொடங்கும் எனவும் 2019 ஆம் ஆண்டில் படம் வெளியாகும் எனவும் தெரிவித்தார். கமல்ஹாசன் இத்திரைப்படத்துடன் தனது 58 ஆண்டு நடிப்புத் தொழில் நிறைவடையும் என திசம்பர் 2018 இல் தெரிவித்தார். படப்பிடிப்பு டிசம்பர் 14 இல் தொடங்குவதாக இருந்தது.[10] ஆனால், இறுதியாக 18 ஜனவரி 2019 இல் தொடங்கியது.[11] இரண்டாம் கட்ட படப்பிடிப்பு 11 பெப்ரவரி 2019 இல் தொடங்கியது.[12]

விபத்து

சென்னைக்கு அருகே தனியார் சுடுடியோவில் அரங்குகள் அமைத்து நடைபெற்று வந்த படப்பிடிப்பில் 2020 பெப்பிரவரி 19 அன்று இரவு விபத்து நடைபெற்றது. இதில் மூன்று நபர்கள் உயிரிழந்தனர். 2020 ஆகத்து 6 அன்று மாலை விபத்தில் உயிரிழந்தவர்களுக்கும் காயமடைந்தவர்களுக்கும் நிவாரணத் தொகை திரைப்பட தொழிலாளர் சங்கம் மூலம் வழங்கப்பட்டது. உயிரிழந்த, பாதிக்கப்பட்டவர்களுக்கு லைகா நிறுவனம் 2 கோடி ரூபாய், கமல்ஹாசன் 1 கோடி ரூபாய், இயக்குநர் ஷங்கர் 1 கோடி ரூபாய் நிவாரணத் தொகையாக வழங்கினார்கள்.[13]

Remove ads

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads