மாஸ்டர் ஸ்ரீதர்

இந்திய நடிகர் From Wikipedia, the free encyclopedia

மாஸ்டர் ஸ்ரீதர்
Remove ads

மாஸ்டர் ஸ்ரீதர் (Master Sridhar) என்று அழைக்கப்பட்ட ஸ்ரீதர் தமிழ் திரையுலகைச் சேர்ந்த ஒரு இந்திய நடிகர் ஆவார். இவர் சுமார் 150 படங்களில் நடித்துள்ளார். தமிழ் திரையுலகில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான இவர் பல திரைப்படங்களில் தனது குழந்தை கால நடிப்பிற்காக பிரபலமானார்.

விரைவான உண்மைகள் மாஸ்டர் ஸ்ரீதர், பிறப்பு ...


Remove ads

திரைப்பட வாழ்க்கை

குழந்தை நட்சத்திரமாக தனது வாழ்க்கையைத் தொடங்கிய ஸ்ரீதர், கந்தன் கருணை, கர்ணன், சுவாமி அய்யப்பன் உள்ளிட்ட பல படங்களில் நடித்தார். ஜெமினி கணேசன் மற்றும் கே. ஆர். விஜயா நடித்த கே.எஸ்.கோபாலகிருஷ்ணனின் குறத்தி மகன் படத்தில் நாயகனாகவும் நடித்தார். கந்தன் கருணை என்ற திரைப்படத்தில் முருகப்பெருமானாக நடித்ததன் மூலம் இவர் நன்கு அறியப்பட்டார். 

ஆதி பராசக்தி (ராஜ் தொலைக்காட்சி), ஞானானந்தம் (பொதிகை), இந்திரஜித் (ஜெயா தொலைக் காட்சி) ஆகியவை இவர் நடித்த சில தொடர்களாகும்.

தமிழில் இவர் கடைசியாக 2007 ஆம் ஆண்டு வெளியான பகவான் ஐயப்பன் என்ற திரைப்படத்தில் நடித்தார்.

Remove ads

குடும்பம்

ஸ்ரீதர் 70களில் பிரபலமான குழந்தை நட்சத்திரமாக இருந்த பேபி இந்திரா என்னும் இந்திராவை மணந்தார். இந்த இணையருக்கு பிரசாந்த் மற்றும் ரக்சித் பாலாஜி என்ற இரு மகன்கள் உள்ளனர். இவர் சென்னை கொட்டிவாக்கம் கற்பகாம்பாள் நகரில் தன் வீட்டில் குடும்பத்துடன் வசித்து வந்தார். இவருக்கு நீண்ட காலமாக இளைப்பு நோய் இருந்து வந்தது. 11 திசம்பர் 2013 அன்று காலை திடீர் மாரடைப்பு காரணமாக இறந்தார். [5]

பகுதி படத்தொகுப்பு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, திரைப்படம் ...


மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads