மிக்-21

மைக்கோயன் உருவாக்கிய சூப்பர்சோனிக் ஜெட் போர் மற்றும் இடைமறிப்பு விமானம் From Wikipedia, the free encyclopedia

மிக்-21
Remove ads

மிகோயன் குருவிச் மிக்-21 என்பது ஒரு மீயொலிவேக சண்டை மற்றும் இடைமறிப்பு தாரை வானூர்தியாகும். இது சோவியத் ஒன்றியத்தில் மிகோயன் குருவிச் நிறுவனத்தால் 1950 களில் வடிவமைக்கப்பட்டது.

விரைவான உண்மைகள் மிக்-21 MiG-21, வகை ...

நான்கு கண்டங்களில் உள்ள ஏறத்தாழ 60 நாடுகள் இந்த வானூர்திகளைப் பயன்படுத்தின. இதன் முதல் வானூர்தி தயாரிக்கப்பட்டு ஏழு தசாப்தங்கள் ஆன பிறகும் இது இன்றும் உபயோகத்தில் உள்ளது. போர் வானூர்தி வரலாற்றில் அதிகம் தயாரிக்கப்பட்ட மீயொலிவேக தாளை வானூர்தி இதுவேயாகும்.

ஆரம்ப காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் இரண்டாம் தலைமுறை வானூர்திகளாகவும், பிற்காலங்களில் தயாரிக்கப்பட்ட விமானங்கள் மூன்றாம் தலைமுறை வானூர்திகளாகவும் கருதப்பட்டன.

Remove ads

வடிவமைப்பு

மிக்-21 சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட முதல் மீயொலிவேக சண்டை மற்றும் இடைமறிப்பு தாரை வானூர்தியாகும். இது மாக் 2 வரை வேகமாக பறக்கக்கூடிய ஒரு இலகுரக போர் வானூர்தியாகும்.[1] இது குறுகிய தூரம் மட்டுமே பறக்கக்கூடிய டெல்டா இறக்கைகள் கொண்ட வானூர்தியாகும்.[2] குறைந்த தூரம் மட்டுமே பறக்க முடிந்ததால் பின்னர் மேம்படுத்தப்பட்ட மாறுபாடுகளில் அதிக எரிபொருள் எடுத்துச் செல்லும் வகையில் இவை மாற்றியமைக்கப்பட்டன. இந்த தாரை வானூர்தியானது வானில் நொடிக்கு 235 மீட்டர் ஏறக்கூடியதாகும்.[1]

Thumb
மிக்-21 சோவியத் ஒன்றியத்தில் உருவாக்கப்பட்ட முதல் மீயொலிவேக சண்டை மற்றும் இடைமறிப்பு தாரை வானூர்தியாகும்

இந்த வானூர்தி ஒரு நீள்வட்ட வடிவில் 1.24 மீட்டர் அகலம் கொண்டுள்ளது. தாரைப் பொறிக்கான காற்று ஒரு கூம்பு வடிவ நுழைவாயில் மூலம் எடுக்கப்படுகிறது. வானூர்தியின் மூக்கின் இருபுறமும், பொறிக்கு அதிக காற்றை வழங்குவதற்கு செவுள்கள் உள்ளன.[1]

விமானத்தின் அடிப்பகுதியில், மூன்று காற்று நிறுத்திகள் உள்ளன, இரண்டு முன்புறம் மற்றும் பின்புறம். காற்று நிறுத்திகளுக்குப் பின்னால் பிரதான இறங்கமைப்பிற்கான விரிகுடாக்கள் உள்ளன. வானூர்தியின் கீழ் பகுதியில் இறக்கையின் பின் விளிம்பிற்குப் பின்னால் ஆயுதங்களை எடுத்துச் செல்வதற்கான இணைப்புப் புள்ளிகள் உள்ளன. செங்குத்து நிலைப்படுத்தி மற்றும் வாலின் அடிப்பகுதியில் உள்ள ஒரு சிறிய துடுப்பு வானூர்தியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. பிரதான இறங்கமைப்பிற்கான சக்கரங்கள் 87° சுழற்றிய பின் உடற்பகுதிக்குள் உள்வாங்குகின்றன. இதனுடன் அதிர்ச்சி உறிஞ்சிகள் இறக்கைக்குள் பின்வாங்குகின்றன. மூக்கு பகுதியில் உள்ள சக்கரம் உடற்பகுதியில் கதிரலைக் கும்பாவிற்கு கீழ் முன்னோக்கி உள்வாங்குகிறது.[1]

Remove ads

தயாரிப்பு

சோவியத் ஒன்றியத்தில் மொத்தம் 10,645 விமானங்கள் கட்டப்பட்டன. அவை மூன்று தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டன: மாஸ்கோ (3,203), கார்க்கி (5,765) மற்றும் திபிலீசி (1,678).[1] உரிமத்தின் கீழ் செக்கோஸ்லோவாக்கியாவில் 194 வானூர்திகள் கட்டப்பட்டன. இந்தியாவின் இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் லிமிட்டெட் 657 வானூர்திகளை தயாரித்தது.

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads