மிதிலா பார்க்கர்
இந்திய நடிகை From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிதிலா பால்கர் (Mithila Palkar) (பிறப்பு 11 சனவரி 1992) ஓர் இந்திய நடிகையாவார். கேர்ள் இன் தி சிட்டி, நெற்ஃபிளிக்சின் லிட்டில் திங்ஸ் போன்ற தொலைக்காட்சி தொடரின் கதாபாத்திரங்களுக்கு பெயர் பெற்றவர். இவர் மார்ச் 2016இல் "கப்" பாடலின் மராத்தி பதிப்பால் பிரபலமடைந்தார்.[2] இவர், மராத்தி மொழியில் 2014ஆம் ஆண்டு மஜா ஹனிமூன் என்ற திரைப்படத்தில் அறிமுகமானார்.[3] இவரது முதல் பாலிவுட் படம் நிகில் அத்வானியின் கட்டி பட்டி என்ற படமாகும். இவர் 2018ஆம் ஆண்டு கர்வான் என்ற திரைப்படத்தில் கதாநாயகியாக தோன்றினார்
Remove ads
ஆரம்ப கால வாழ்க்கை
மிதிலா பால்கர் 11 சனவரி 1992 இல் ஒரு மராத்தி குடும்பத்தில் பிறந்தார்.[4] இவர் ஆரம்பத்தில் வசாயில் தன் பெற்றோருடன் வாழ்ந்தார். ஆனால் இவரும் இவரது சகோதரியும் பின்னர் பயணத்தில் உள்ள அசௌகரியங்கள் காரணமாக தாய்வழி தாத்தா பாட்டியுடன் தாதரில் வசித்து வந்தனர். இவரது குடும்பத்தில் எவரும் நடிகர்களாக இருந்ததில்லை. இவரது தாத்தா ஆரம்பத்தில் இவரது நடிக்கும் முடிவை ஏற்கவில்லை.[5] லாஸ் ஏஞ்சலாஸில் வசிக்கும் இவரது சகோதரி நரம்பணுவியலில் முனைவர் பட்டம் பெற்றவர்.[6] மிதிலா முதன்முதலில் ஏழாம் வகுப்பு படிக்கும் போது ஒரு பள்ளிகளுக்கு இடையேயான நாடகப் போட்டியில் நடித்தார்.
கல்வி
இவர் உயர்நிலைப் பள்ளியில் அறிவியலைப் பின்தொடர்ந்தார். ஆனால் திரைப்படங்களிலும், நாடகங்களிலும் ஈடுபடுவதற்குப் பிறகு, பாந்த்ராவின் எம்.எம்.கே கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார்.[7] 2013 இல் பட்டம் பெற்ற பிறகு, இவர் குவாசர் தியேட்டர் புரொடக்சன்ஸில் நடிப்பதற்கு முயற்சி செய்தார். ஆனால் இவர் தனது வாய்ப்பை பெறவில்லை. ஆனால் குவாசர் இவருக்கு மேடையில் பணி வழங்கினார். அவர்களின் நாடகத் திருவிழாவான தெஸ்போவை நிர்வகித்தார்.[8]
Remove ads
பிற திறமைகள்
இவர் இந்துஸ்தானி இசையில் மராத்தி பாடகி வர்ஷா பாவேவிடம் பயிறிசி பெற்றார்.[9] மேலும்கதக்கிலும் பயிற்சி பெற்றார். லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள ஸ்டெல்லா அட்லர் நாடகப் பயிற்சி நிறுவனத்தில் நடிப்புப் பயிற்சியைனை மேற்கொண்டார்.[7]
தொழில்
மிதிலா பால்கர் 2014 ஆம் ஆண்டு 16 வது மும்பை சர்வதேச திரைப்பட விழாவில் காட்சிப்படுத்தப்பட்ட மஜா ஹனிமூன் என்ற மராத்தி குறும்படத்தில் அறிமுகமானார்.[10] இந்தியத் திரைப்படத் துறையில் இவரது முதல் வெற்றி சூன் 2014 இல், கட்டி பட்டியில் இருந்தது. இதில் இம்ரான் கானின் சகோதரியின் பாத்திரத்திற்காக வெற்றிகரமாகத் தேர்வானார்.[11] படம் நன்றாக ஓடவில்லை ஆனால் இவர் கவனிக்கப்பட்டு மேகி,[12] டாடா டீ [13], சொமேட்டோவின் விளம்பரங்களில் நடிப்பதற்கான வாய்ப்புகளைப் பெற்றார்.[11]
கப் பாடல்
பிட்ச் பெர்பெக்டில் இருந்து அனா கென்ட்ரிக்கின் "கப்" பாடலால் ஈர்க்கப்பட்டு, "கப்" பாடலின் பதிப்பால் பால்கர் ஒரே இரவில் பிரபலமடைந்தார். அந்த நிகழ்படத்தில் இவர் பிரபலமான மராத்தி பாடலான ஹாய் சால் துரு துருவை (முதலில் ஜெயவந்த் குல்கர்னி பாடியது) 'கப்' பாடல் பாணியில் நிகழ்த்தினார். மிதிலாவின் கப் பாடல் யூடியூபில் 6 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளுடன் வைரலாகியது.[7] இவர் முன்பு கப் பாடலின் மற்றொரு பதிப்பை முயற்சித்தார். "கான்ட் டேக் மை ஐஸ் ஆஃப் யூ" இது 22,000 க்கும் மேற்பட்ட பார்வைகளைப் பெற்றது.[9] மகாராட்டிரா தினத்தையொட்டி யூட்யூபில் 1 மே 2016 அன்று வெளியிடப்பட்ட பாரதிய டிஜிட்டல் பார்ட்டியுடன் (பாடிபா) இணைந்து "மகாராஷ்டிரா தேசா" [14] என்ற பாடலை பாடினார்.
போர்ப்ஸ் இந்தியா 30 பிப்ரவரி 2018 இல் 30 வயதிற்குட்பட்ட 30 இளம் சாதனையாளர்களின் பட்டியலில் இவரை பட்டியலிட்டது.[15][16][17] 2020 ஆம் ஆண்டில், 35 வயதுக்குட்பட்ட 'இந்தியாவின் தொழில்முனைவோர் 35' என்ற பட்டியலில் இவர் இடம் பிடித்தார்.[18][19]
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads