மிர்பூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிர்பூர் மாவட்டம் (Mirpur district) (ضلع میر پور) இந்தியப் பிரிவினையின் போது பாகிஸ்தான் ஆக்கிரமித்த ஆசாத் காஷ்மீர்[1] பிரதேசத்தில் உள்ள 10 மாவட்டங்களில் ஒன்றாகும்.[2] இதன் நிர்வாகத தலைமையிடம் மிர்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டடத்தின் மக்கள்தொகை 4,56,200 ஆகும். [3]இதன் பரப்பளவு 1,010 சதுர கிலோ மீட்டர் ஆகும். பீர் பாஞ்சால் மலைத்தொடரில் அமைந்த மிர்பூர் மாவட்டம் பெரும்பாலும் மலைகளும், சில சமவெளிகளும் கொண்டுள்ளது. இதன் தட்பவெப்பம், கோடைக் காலத்தில் கடும் வெப்பமும்; குளிர்காலத்தில் கடுங்குளிரையும் கொண்டது.
Remove ads
வரலாறு

ஆகஸ்டு, 1947-க்கு முன்னர் பிரித்தானிய இந்தியாவின் ஆட்சியின் கீழிருந்த சதேச சமஸ்தானமான ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் ஜம்மு பிரதேசத்தில் இருந்த ஐந்து மாவட்டங்களில் ஒன்றாக இருந்தது. [4][5] 1941-ஆம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி மிர்பூர் மாவட்டத்தின் மக்கட்தொகை 3,86,655 ஆகும். மக்கட்தொகையில் 80% இசுலாமியர்களும் மற்றும் 16% இந்துக்களும், 4% சீக்கியர்களும் மறவர்களும் இருந்தனர்.[6] 1947_1948 இந்திய பாகிஸ்தான் போரின் போது, பாகிஸ்தான் நாடு ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மேற்கில் இருந்த ஆசாத் காஷ்மீர் மர்ற்றும் வடக்கில் இருந்த ஜில்ஜிட் பல்திஸ்தான் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்ததது. மிர்பூர் மாவட்டம் கோட்லி, மிர்பூர் மற்றும் பீம்பூர் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டிருந்தது. தற்போது கோட்லி மர்ற்ர்றும் பீம்பூர் தனி மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

தற்போது மிர்பூர் மாவட்டம் மிர்பூர் வட்டம், தயாள் வட்டம் மற்றும் சக்ச்ஸ்வரி வட்டம் என மூன்று வருவாய் வட்டங்களைக் கொண்டுள்ளது.
Remove ads
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads