ஜம்மு காஷ்மீர் இராச்சியம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் பிரித்தானிய இந்தியப் பேரரசில், மன்னராட்சியாக விளங்கியது. ஜம்மு காஷ்மீர் இராச்சியம் 1846இல் நிறுவப்பட்டு, இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் 1947-இல் இந்திய அரசுடன் இணைக்கப்பட்டது.

Remove ads
வரலாறு
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் இராசபுத்திர குல டோக்ரா வம்சத்தவர்களால் 1846 முதல் 1952 முடிய ஆளப்பட்டது. [1] முதலாம் ஆங்கிலேய-சீக்கியர் போருக்குப் பின்னர் அமிர்தசரஸ் ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீர் இராச்சியம் 1846இல் நிறுவப்பட்டது.
பின்னர் முதலாம் ஆங்கிலேய சீக்கியப் போரில் தோல்வியுற்ற சீக்கியப் பேரரசின் காஷ்மீர், லடாக் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் பகுதிகளை, பிரித்தானிய இந்தியப் பேரரசு, ஜம்முவின் டோக்ரா வம்ச மன்னர் குலாப் சிங்கிற்கு (1792–1857) 75 இலட்சம் ரூபாய்க்கு மாற்றித் தரப்பட்டது.[2]
இந்தியப் பிரிவினையின் போது 1947இல் ஜம்மு காஷ்மீர் மன்னராயிருந்த இந்து மன்னர் மகாராஜா ஹரி சிங், இந்தியா அல்லது பாகிஸ்தான் நாடுகளுடன் சேராது, ஜம்மு காஷ்மீரை தனித்து தன்னாட்சியுடன் நிர்வகிக்க முடிவு செய்தார்.[3]
ஜம்மு காஷ்மீர் இராச்சியம் தன்னாட்சியுடன் இருப்பதை தடுக்கும் நோக்கத்துடன், பாகிஸ்தான் ஆதரவுடன், பஷ்தூன் மக்கள், ஜம்மு காஷ்மீரின் மேற்கு மாவட்டங்கள் மற்றும் வடக்குப் பகுதிகளில் தாக்குதல் நடத்தினர்.
இதனால் பயமுற்ற ஜம்மு காஷ்மீர் மன்னர் ஹரி சிங், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை இந்தியாவுடன் இணைக்க 26 அக்டோபர் 1947-இல் ஜம்மு காஷ்மீர் இணைப்பு ஒப்பந்தம் கொண்டார்.[4][5]இந்த ஒப்பந்தப்படி, ஜம்மு காஷ்மீரில் ஊடுருவிய பாகிஸ்தான் படையினரை ஒடுக்க, இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி வைத்தது.[6]
பாகிஸ்தான் ஆதரவுப் படையினர்களால் கைப்பற்றப்பட்ட ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் பகுதிகள் ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட்-பால்டிஸ்தான் என்று அழைக்கப்படுகிறது. இப்பகுதிகள் தற்போது பாகிஸ்தானின் கட்டுப்பாட்டில் உள்ளது.[7]
Remove ads
ஜம்மு காஷ்மீர் மகாராஜக்கள்

ஜம்மு காஷ்மீர் பிரதமர்கள்
Remove ads
நிர்வாகப் பிரிவுகள்
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் 1911, 1921 மற்றும் 1931 ஆண்டுகளின் நடந்த மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி, கீழகண்டவாறு ஜம்மு காஷ்மீரின் நிர்வாகப் பிரிவுகள் இருந்தன.:[9][10]
- ஜம்மு மாகாணம்: ஜம்மு மாவட்டம், கதுவா மாவட்டம், உதம்பூர் மாவட்டம், ரியாசி மாவட்டம் மற்றும் மிர்புர் மாவட்டம் (ஆசாத் காஷ்மீர்).
- காஷ்மீர் மாகாணம்: அனந்தநாக் மாவட்டம், பாரமுல்லா மாவட்டம் மற்றும் முசாஃபராபாத்
- எல்லைப்புற மாவட்டங்கள்: லடாக், ஜில்ஜிட்-பால்டிஸ்தான்
- உள்ளூர் ஜமீந்தார்கள்: பூஞ்ச் மற்றும் பாதர்வா
புவியியல்

ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் தெற்கு பகுதியான் ஜம்முவுக்கு தெற்கில், இந்தியாவின் பஞ்சாப் பகுதியும், மேற்கில் பாகிஸ்தானும், தென்கிழக்கில் இந்தியாவின் இமாசலப் பிரதேசம், கிழக்கில் சீனாவின் திபெத் பகுதியும், வடக்கில் ஆப்கானித்தான் மற்றும் சீனாவும் எல்லைகளாக இருந்தன.
மன்னராட்சியைக் கலைத்தல்
ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தின் மகாராஜா ஹரி சிங் என்பவரால், ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, இந்தியாவுடன் இணைக்கும் பொருட்டு 26 அக்டோபர் 1947-இல் கையொப்பமிட்ட சட்டபூர்வமான ஆவணம் ஆகும்.[11][12][13]
15 ஆகஸ்டு 1947-இல் இந்திய விடுதலைக்குப் பின்னர், பாக்கிஸ்தான் படைகளும், பழங்குடிகளும் கில்ஜித் - பல்திஸ்தான் பகுதிகளை ஆக்கிரமிக்கத் தொடங்கினர். இதனைக் கண்டு பயந்த மன்னர் ஹரி சிங் ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, இந்தியாவுடன் ஜம்மு காஷ்மீர் இணைக்கும் ஒப்பந்தத்தில் 26 அக்டோபர் 1947-இல் மகாராசா ஹரி சிங் கையொப்பமிட்டார். இதனால் ஜம்மு காஷ்மீரில் மன்னராட்சி முடிவுக்கு வந்தது. பின்னர் ஜம்மு காஷ்மீர் மாநிலம் சிறப்புத் தகுதிகளுடன் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. [14][15][16] பின்னர் 2 அக்டோபர் 1947இல் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் சேக் அப்துல்லா, ஜம்மு காஷ்மீரின் முதல் பிரதம அமைச்சராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Remove ads
இந்திய பாகிஸ்தான் போர், 1947
மன்னர் ஹரி சிங் தலைமையிலான ஜம்மு காஷ்மீர் இராச்சியத்தை, பாகிஸ்தான் நாட்டுடன் இணைத்துக் கொள்வதற்காக 22 அக்டோபர் 1947 முதல் 31 டிசம்பர் 1948 முடிய நடந்த முதல் இந்திய-பாகிஸ்தான் போர் ஆகும்.[17] இப்போரில் பாகிஸ்தான், ஆசாத் காஷ்மீர் மற்றும் ஜில்ஜிட் - பால்டிஸ்தான் பகுதிகளை ஆக்கிரமிப்பு செய்தது. இந்தியா, காஷ்மீர் பள்ளத்தாக்கு, ஜம்மு மற்றும் லடாக் பகுதிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டது.
Remove ads
இதனையும் காண்க
மேற்கோள்கள்
ஆதார நூற்பட்டியல்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads