மீக்காத்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
மிக்காத் (Mīqāt, (அரபி: ميقات "ஒரு குறிப்பிட்ட இடம்" எனப் பொருள்) எனப்படுவது ஹஜ் அல்லது உம்றா எனப்படும் புனிதப் பயணமாக மக்கா செல்லும் புனிதப் பயணிகள் இஹ்றாம் (புனிதப் பயணிகள் ஆடை) அணிய வேண்டிய ஒரு குறிப்பிட்ட எல்லையாகும். மக்காவை வந்தடைய ஐந்து இடங்களை முகம்மது நபி குறித்துள்ளார். இந்தியா மற்றும் தூரகிழக்கு நாடுகளில் இருந்து வரும் பயணிகளின் வசதிக்காக ஆறாவது இடம் பின்னர் ஏற்படுத்தப்பட்டது.

ஐந்து மீகாதுகள் பின்வருமாறு:
- துல் ஹுலைபாஹ் (Dhu'l-Hulayfah) - இது மதினாவிலிருந்து 9கிலோ மீட்டர், மெக்காவிலிருந்து 450கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. மதீனாவில் இருந்து செல்லும் புனிதப் பயணிகள் இதனூடாக வருவர்.
- ஜுஹ்பாஹ் (Juhfah) - இது மெக்காவிலிருந்து வடமேற்கு திசையில் 190 கி.மீ. தூரத்தில் உள்ளது. சிரியாவில் இருந்து வரும் பயணிகள் இதனூடாக வருவர்.
- கர்ன் அல்–மனாசில் (Qarnu 'l-Manāzil) - இது மெக்காவிலிருந்து கிழக்கு திசையில் 90 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு மலைப் பகுதி. சவூதி அரேபியாவின் மத்திய பகுதியான நஜ்துவில் இருந்து பயணிகள் இந்த மீகாதிற்கு வருவர்.
- யலம்லம் (Yalamlam) - மெக்காவிலிருந்து தென்கிழக்கு திசையில் 50 கி.மீ. தொலைவில் உள்ள ஒரு மலைப் பகுதி. யெமன் நாட்டின் திசையிலிருந்து செல்லும் பயணிகள் இந்த மீகாதிற்கு வருவார்கள். கடல் வழியாக வரும் சீனா, சப்பான், இந்திய, பாக்கித்தான் இசுலாமியர்களும் இதனூடாக வருவர்.
- தத் இர்க் (Zāt-i-'Irq) - மெக்காவிலிருந்து வடகிழக்கு திசையில் 85 கி.மீ. தூரத்தில் உள்ளது. ஈராக், ஈரான் நாடுகளின் திசையிலிருந்து மெக்காவிற்கு செல்லும் இசுலாமியர்கள் இந்த மீகாதிற்கு வருவார்கள்.
இஹ்றாம் இல்லாமல் இவ்விடங்களைத் தாண்ட எவரும் அனுமதிக்கப்படுவதில்லை.
Remove ads
மேற்கோள்கள்
- Hughes, Thomas Patrick (1994). Dictionary of Islam. Chicago, IL: Kazi Publications Inc. USA. ISBN 0-935782-70-2.
{{cite book}}
: Cite has empty unknown parameter:|coauthors=
(help)
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads