மீநாயகன் திரைப்படம்

From Wikipedia, the free encyclopedia

மீநாயகன் திரைப்படம்
Remove ads

மீநாயகன் திரைப்படம் (Superhero film) என்பது ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மீநாயகன்களின் செயல்களை மையமாகக் கொண்ட ஒரு திரைப்பட வகை ஆகும். இந்த வகைத் திரைப்படம் மனித வாழ்விற்கு அப்பாற்பட்ட சக்திகளை கொண்ட நபர்களை பற்றி சித்தரிக்கப்படுகின்றது. இந்த சக்திகள் வேற்று கிரகவாசிகள், விபத்துகள் மற்றும் மந்திரங்கள் மூலம் இவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. அதன் பிறகு மனித நேயமற்ற செயல்களை செய்யும் சூப்பர்வில்லன் மற்றும் வேற்று கிரகவாசிகளிடமிருந்து இந்த பூமியை எப்படி மீநாயகன்கள் காப்பாற்றுகின்றார்கள் என்றே சித்தரிக்கப்படுகின்றது.

இந்த படங்களில் பொதுவாக அதிரடி, சாகசம், கனவுருப்புனைவு அல்லது அறிவியல் புனைகதைகளை மையமாக வைத்து ஒரு குறிப்பிட்ட கதாபாத்திரத்தின் மூலம் சித்தரிக்கப்படுகின்றது. இந்த திரைப்படத்தில் இவர்களுக்கு கிடைக்கப்பெறும் சிறப்பு சக்திகளின் தோற்றம் மற்றும் அவர்களின் உதவும் குணங்களை பற்றியே கதை நகர்கின்றது.

Thumb
தி அவேஞ்சர்ஸ் திரைப்படத்தின் நடிகர்கள்

பெரும்பாலான மீநாயகன் திரைப்படங்கள் மீநாயகன் வரைகதையை அடிப்படையாகக் கொண்டே எடுக்கப்படுகின்றது. சில திரைப்படங்கள் இயந்திர மனிதத் தொடர், விண்கல் நாயகன் போன்ற அசல் திரைப்படங்களாகவும் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வானொலித் தொடர், தொலைக்காட்சி தொடர் மற்றும் ஜப்பான் நாட்டு மங்கா கதைகளையும் மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது. 2000 களில் ஆரம்பத்தில், மீநாயகன் திரைப்படம் உலகளவில் ஆதிக்கம் செலுத்தும் வடிவமாக மாறியுள்ளது. 2000 ஆம் ஆண்டிலிருந்து மிகவும் குறிப்பிடத்தக்க மற்றும் வெற்றிகரமான சூப்பர் ஹீரோ படங்கள் 20ஆம் சென்சுரி பாக்ஸ் இன் எக்ஸ்-மென், சாம் ரைமி இயக்கிய இசுபைடர் மேன்,[1] பிக்சார் இன் தி இன்கிரெடிபில்ஸ், கிறிஸ்டோபர் நோலன் இயக்கிய பேட் மேன்,[2][3] மார்வெல் திரைப் பிரபஞ்சம் தயாரித்த அயன் மேன் மற்றும் டிசி தயாரித்த சூப்பர் மேன் போன்ற பல திரைப்படங்கள் வெளியாகியுள்ளது.

இது வணிக ஆதிக்கத்திற்கு பெரும் பங்கை வகிக்கின்றது. அகாதமி விருது போன்ற விருதுகளும் வென்றுள்ளது. சில தருணங்களில் நேயர்களின் மத்தியில் நேர்மறையான விமர்சனங்களையும் பெற்றுள்ளது. அதிரடி, திகில், கனவுருப்புனைவு, நகைச்சுவைத் திரைப்படம் போன்ற பல்வேறு வகைகளில் மீநாயகன் திரைப்படங்கள் வெளியாகி வணிக ரீதியாக வெற்றி பெற்றுள்ளன.

Remove ads

மேலும்

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads