முகம்மது சமி (பாக்கித்தான் துடுப்பாட்டக்காரர்)
பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர் From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகம்மது சமி (Mohammad Sami,Urdu: محمد سمیع பிறப்பு: பிப்ரவரி 24. 1981), ஒரு பாக்கித்தானியத் துடுப்பாட்டக்காரர். இவர் பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டம், ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம் மற்றும் பன்னாட்டு இருபது20 போட்டிகளில் விளையாடி வருகிறார். 2000 இலிருந்து பாக்கித்தான் அணிக்காக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் விளையாடி வருகின்றார். சுஐப் அக்தர் மற்றும் வக்கார் யூனிசு ஆகியோருக்கு அடுத்தபடியாக சிறந்த விரைவு வீச்சாளர்களுள் ஒருவராக அறியப்படுகிறார். அனைத்து வடிவப் போட்டிகளிலும் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய ஒரே பந்துவீச்சாளர் எனும் சாதனை படைத்துள்ளார். துல்லியமாக மட்டையாளர் நிற்கும் வரைகோட்டிற்கருகே வீசப்படும் பந்துகளை வீசுவதன் மூலமாக இவர் பரவலாக அறியப்படுகிறார்.
Remove ads
சர்வதேச போட்டிகள்
சமியை நவீன காலத்திய மால்கம் மார்ஷல் என இம்ரான் கான் புகழ்ந்தார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் அறிமுகமானார். இந்தப் போட்டியில் 106 ஓட்டங்கள் விட்டுக்கொடுத்து 8 இலக்குகளைக் கைப்பற்றினார். இதில் முதல் ஆட்டப்பகுதியில் 3 இலக்கினையும் இரண்டாவது ஆட்டப்பகுதியில் 5 இலக்கினையும் கைப்பற்றினார்.[1] இதன்மூலம் அறிமுகப் போட்டியில் அதிக இலக்குகள் வீழ்த்திய வீரர் எனும் சாதனையைப் படைத்தார். பின் இவரின் மூன்றாவது போட்டியில் இலங்கைத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான மூன்றாவது தேர்வுத் துடுப்பாட்டத்தில் ஹேட்ரிக் வீழ்த்தினார். 2002 ஆம் ஆண்டில் மேற்கிந்தியத்தீவுகள் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்தினார். இதன்மூலம் தேர்வுத் துடுப்பாட்டம் மற்றும் ஒருநாள் போட்டிகளிலும் ஹேட்ரிக் இலக்கினை வீழ்த்திய இரண்டாவது பாக்கித்தானிய வீரர் எனும் சாதனை படைத்தார். இதற்கு முன்பாக வசீம் அக்ரம் இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார்.[2][3] 2003 ஆம் ஆண்டில் நியூசிலாந்து துடுப்பாட்ட அணிக்கு எதிரான தொடரிலும் சிறப்பாக விளையாடினார்.டிசம்பர் 1 இல் நடைபெற்ற போட்டியில் 10 ஓட்டங்கள் விட்டுகொடுத்து 5 இலக்குகளைக் கைப்பற்றினார். இது தான் இவரின் சிறந்த பந்துவீச்சாக உள்ளது. இதற்கு முன்பாக சார்ஜா அமீரகத்தில் கென்ய துடுப்பாட்ட அணிக்கு எதிரான போட்டியில் 25 ஒட்டங்கள் கொடுத்து 4 இலக்குகளைக் கைப்பற்றினார். மார்ச் 24,2004 இல் லாகூரில் நடைபெற்ற இந்தியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் விளையாடினார். இது இவரின் 50 ஆவது போட்டியாகும். முதல் தரத் துடுப்பாட்டப் போட்டிகளில் 100 இலக்குகளைக் கைப்பற்றியுள்ளார்.
2004 ஆம் ஆண்டில் நடைபெற்ற ஆசியக்கோப்பைத் தொடரில் வங்காளதேசத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் இவர் ஒரு ஓவரில் 17 பந்துகள் வீசினார். இதில் 7 அகலப்பந்தும் 4 நோ பாலும் அடங்கும்[4]. தேர்வுத் துடுப்பாட்டப் பந்துவீச்சில் 50 சராசரியோடு 50 இலக்குகளை வீழ்த்திய ஒரே நபர் எனும் சாதனையைப் படைத்தார்.[5]
2009-2010 ஆம் ஆண்டில் ஆத்திரேலியத் துடுப்பாட்ட அணிக்கு எதிரான தேர்வுத் துடுப்பாட்டத் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப் பெற்றார். சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இரண்டாவது போட்டியின் முதல் ஆட்டப்பகுதியில் 27 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2010 ஐசிசி உலக இருபது20 போட்டித் தொடரில் விளையாடும் வாய்ப்பினைப்பெற்றார். உமர் குல்லுக்கு காயம் ஏற்பட்டதனால் இவருக்கு வாய்ப்பு கிடைத்தது.[6][7]
Remove ads
சான்றுகள்
வெளியிணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads