முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்

From Wikipedia, the free encyclopedia

முகம்மது நபி நிகழ்த்திய அற்புதங்கள்
Remove ads

முகம்மது நபி (ஸல்) அவர்கள் நிகழ்த்திய அற்புதங்கள் என்பது இஸ்லாமிய நம்பிக்கையின்படி தனது வாழ்நாளில் முகம்மது நபியால் நிகழ்த்தப்பட்ட இயற்கைக்கு மீறிய நிகழ்வுகளாகும். இவற்றில் பெரும்பாலான அற்புதங்கள் குர்ஆனில் அல்லது ஹதீஸ்கள் மூலம் எடுத்து காட்டப்படுகின்றன.

முகம்மது நபி (ஸல்) யின் அற்புதங்கள், உணவை அதிகரிக்க வைத்தல், மறைந்திருக்கும் நீரை வெளிப்படுத்தல், மறைவானவை குறித்த அறிவு, தீர்க்கதரிசனங்கள், மருத்துவ சிகிச்சைமுறைகள், இயற்கை நிகழ்வுகள் மீதான ஆற்றல் எனப் பரந்த அளவில் அமைந்திருந்தன.[1]

வரலாற்றாசிரியர் டெனிஸ் கிரில் கூற்று படி, அல் குர்ஆன் மூலம் மட்டுமே தெளிவாக முகம்மது நபி (ஸல்)யின் அற்புதங்களை விவரிக்க முடியாது.[2] எனினும், பல அற்புதங்கள் குர்ஆனில் கூறப்பட்டு பின் அதனுடைய மேலதிகத் தகவல்கள் ஹதீஸ்கள் மூலம் விவரிக்கப்பட்டுள்ளன.[3] ஹதீஸ்கள் முகம்மது நபி (ஸல்)யின் அற்புதங்கள் விளக்குவதில் இன்றியமையாததாக உள்ளது.[4]

Remove ads

அற்புதங்களின் பட்டியல்

பள்ளிவாசல் சென்று அங்கிருந்து விண்ணுலகம் சென்ற இரவுப் பயணம்)

  • அலி இபின் சகல் ரப்பான் அல் தபரி அவர்கள் கூற்றுப் படி முகம்மது நபி தனது எதிரிகள் அனைவரையும் வென்றது அற்புதங்களில் ஒன்றாகும்.[9] இதைப் போன்ற பல நவீன முசுலிம் வரலாற்றாசிரியர்கள், முகம்மது நபி குறுகிய காலத்தில் மதம், சமூகம், அரசியல், இராணுவம் மற்றும் இலக்கியம் போன்ற பல்வேறு உலகியல் துறைகளில் மாற்றங்களை நிகழ்த்தியதும், "நாடோடி குழுக்களாகவும் கல்வியறிவற்றவர்களாவும் இருந்த அரேபியர்களை உலகை வென்றவர்களாக மாற்றியதும் அற்புதமாகக் கருதப்படுகின்றது.[10][11]
  • பல சந்தர்ப்பங்களில் இறைவன் அருளால் உணவு மற்றும் தண்ணீர் வழங்கியது.[12]
  • அழுத ஈச்ச மரம் முகம்மது நபி(ஸல்) உரை நிகழ்த்தும் போது அதன் மீது சாய்ந்ததால் ஆறுதல் அடைந்தது.[12]
  • அவரது கட்டளையை ஏற்று இரண்டு மரங்கள் நகர்ந்தது.[12]
  • அவரது முன்னறிவுப்புக்ள்.
  • மக்காவிலிருந்து மதீனா சென்ற ஹிஜ்ரா பயணம் செய்தது.[13]
  • முகம்மது நபி தபுக் யுத்தத்தின் ஆயிரக்கணக்கான வீரர்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் நீர் சுரக்கச் செய்த நிகழ்வு.[14]
  • முகம்மது நபி ஹுதைபியா உடன்படிக்கை போது மக்களின் தாகம் தணிக்கவும் உளூச் செய்யவும் வறண்ட கிணற்றை ஊற்றெடுக்கச் செய்தது.[14]
  • பத்ர் யுத்தம் போது அவர் கையினால் எறிந்த தூசியினால் சில எதிரிகளைக் குருடாக்கினார். இந்நிகழ்வு குர்ஆனில் சூரா அல்-அன்ஃபால், வசனம் 17 (8:17) இல் கூறப்பட்டுள்ளது.[14]
  • முகம்மது நபியின் தோழர் உஸ்மானுக்கு பிற்காலத்தில் பேராபத்து ஏற்படும் எனக் கூறினார். அதே போல் உஸ்மான் அவர்கள் கலிபா பதவி ஏற்றபின் அவருக்கு பேராபத்து ஏற்பட்டது.[14]
  • முகம்மது நபியின் தோழர் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் நீதியில்லா குழுவால் கொல்லப்பட நேரும் எனக் கூறினார். அதே போல் அம்மார் இப்னு யாசிர் பிற்காலத்தில் கொல்லப்பட்டார்.[14]
  • முகம்மது நபி, பிற்காலத்தில் இறைவன் அவரது பேரன் ஹசன் மூலம் இரண்டு பெரிய முஸ்லீம் குழுக்கள் இடையே சமாதானம் ஏற்படச் செய்வார் என முன்னறிவிப்புக் கூறினார். பிற்காலத்தில் ஹசன்-முஆவியா குழுக்களுக்கிடையே ஒப்பந்தம் நடைபெற்றது.[14]
  • அவர் முஸ்லிம்களின் எதிரிகளின் பிரபலமான ஒருவரை கொல்வேன் என்று கூறினார். அதே போல் உஹது போரில் உபை இப்னு கலப் கொல்லப்பட்டார்.[15]
  • பத்ரு போர் ஆரம்பிக்கும் முன்பே எதிரிப்படையின் தலைவன் எவ்விடத்தில் கொல்லப்படுவான் என சுட்டிக்காட்டினார். அதேபோல அவர் சுட்டிக்காட்டிய இடத்தில் எதிரிப்படையின் தலைவர் கொல்லப்பட்டார்.[15]
  • அரேபிய பாலைவனத்தில் வாழ்ந்த அவர் பிற்காலத்தில் தமது நாட்டில் கடல் பகுதியும் இருக்கும் எனக்கூறினார். அதே போல் கலிபாக்கள் ஆட்சியில் நாட்டின் எல்லைகள் விரிந்து கடல் பகுதியும் நாட்டின் எல்லையில் வந்தது.[15]
  • அவர் தமது மனைவிகளிடம் தாம் இறந்த பிறகு மனைவிகளில் அதிகத் தொண்டு செய்யும் ஒருவரே விரைவில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் அவர் இறந்த பிறகு அதிக தொண்டுள்ளம் கொண்ட அவரது மனைவியான ஜைனப் இறந்தார்.[15]
  • அப்துல்லா இப்னு மஸ்ஊத் அவர்களின் பால் வற்றிய ஆடு முகம்மது நபி நிகழ்த்திய அற்புதத்தால் அதிகமாக பால் கொடுத்தது.[15]
  • கைபர் போரில் நோயுற்ற அலீயின் கண்ணைக் குணப்படுத்தினார்.[1]
  • வறண்டு கிடந்த மதீனா நகரில் மழை பொழிய காரணமாக இருந்தார்.[16]
  • அவரது விரல்களுக்கு இடையே இருந்து தண்ணீர் வரச் செய்தது அற்புதமாகக் கருதப்படுகிறது.[17]
  • முகம்மது நபி தபுக் போரில் கையளவு பேரித்தம் பழங்கள் மூலம் பல வீரர்களின் பசியைத் தணிக்க வைத்தார்.[18]
  • முகம்மது நபி அவர்கள் தான் இறந்த பிறகு எனது குடும்ப உறவினர்களில் தனது மகள் பாத்திமா தான் முதலில் இறப்பார் எனக்கூறினார். அதே போல் முகம்மது நபி இறந்த பிறகு அவரது மகள் பாத்திமா தான் முதலில் இறந்தார்.[19]
  • ஹுனைன் போரில் அயத் பின் அம்ரு என்பவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு இரத்தம் வழிந்தது முகம்மது நபி அவர்கள் தன் கையால் இரத்தத்தைத் துடைத்து இறைவனிடம் பிரார்த்தனை செய்ய அவர் காயம் ஆறி நெற்றி பளபளப்பாக மாறியது.[20]
Remove ads

மேற்கோள்கள்

மேலும் படிக்க

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads