முகலிங்கம், சிறீகாகுளம் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முகலிங்கம் (Mukhalingam), இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் வடக்கில் அமைந்த சிறீகாகுளம் மாவட்டத்தில் உள்ள ஜலுமுரு மண்டலில் அமைந்த தொல்லியல் கிராமம் ஆகும். வம்சதாரை ஆற்றின் இடது கரையில் அமைந்த முகலிங்கம் கிராமம், ஸ்ரீகாகுளம் நகரத்திலிருந்து 48 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகில் சிசுபால்கர் தொல்லியல் களம் மற்றும் கலிங்கப்பட்டினம் உள்ளது.
கிபி 11-ஆம் நூற்றாண்டில் இக்கிராமம் கீழைச் சாளுக்கியர்களின் தலைநகரமாக இருந்தது. இக்கிராமம் எட்டாம் நூற்றாண்டின் பிற்பகுதியிலிருந்து, 11-ஆம் நூற்றாண்டின் துவக்கம் முடிய முககேஸ்வரர், சோமேஸ்வரர் மற்றும் பீமேஸ்வரர் ஆகிய மூன்று தெய்வங்களுக்கான கோயில்களின் தொகுதியாக இருந்தது. [2][3]
Remove ads
மக்கள் தொகை பரம்பல்
2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 837 குடியிருப்புகள் கொண்ட முகலிங்கம் கிராமத்தின் மக்கள் தொகை 3,022 ஆகும். அதில் ஆண்கள் 1,504 மற்றும் பெண்கள் 1,518 ஆக உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 265 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 63.58% ஆகவுள்ளது. [4]
படக்காட்சிகள்
- முகலிங்கம் கோயில் வளாகத்தில் மும்மூர்த்திகளின் சிற்பம்
- முகலிங்கம் கோயில் விமானம்
- குடம் வழியாக நீர் வழியும் சிற்பம்
- முகலிங்கம் கோயில் வளாகம்
இதனையும் காண்க
- முகலிங்க மூர்த்தி
- கலிங்கப்பட்டினம்
- சிசுபால்கர் தொல்லியல் களம்
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads