பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் (முன்னர் முகல்சராய் சந்திப்பு)(நிலையக் குறியீடு: MGS)[1] இந்திய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் முகல்சராயில் அமைந்துள்ளது. இது இந்தியாவில் அதிக தொடருந்துகள் கடக்கும் சந்திப்புகளின் வரிசையில் நான்காம் இடம் பெறுகிறது[2]. இந்த நிலையத்தில் நாளொன்றுக்கு 200 தொடருந்து வண்டிகள் நின்று செல்கின்றன.[3]
Remove ads
பெயர் மாற்றம்
முகல்சராய் சந்திப்பு தொடருந்து நிலையத்தின் பெயரை, பண்டிட் தீனதயாள் உபாத்தியாயா சந்திப்பு தொடருந்து நிலையம் என மாற்றம் செய்ய இந்திய அரசின் உள்துறை அமைச்சகம் 14 அக்டோபர் 2017 அன்று முடிவு செய்துள்ளது. [4]
மின்மயமாக்கம்
கயா - முகல்சராய் வழித்தடத்தில் உள்ள நிலையங்கள் 1961-63 ஆண்டுவாக்கில் மின்மயமாக்கப்பட்டன. 1963-65 ஆண்டுவாக்கில் முகல்சராய் பணிமனையும் மின்மயமாக்கப்பட்டது.[5]
பயணிகள்
இது இந்தியாவில் அதிக பயணிகள் வந்து செல்லும் முதன்மையான நூறு தொடருந்து நிலையங்களில் ஒன்று.[6] ஆண்டுதோறும் 65 லட்சம் பயணிகள் வந்து செல்வதாக புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.[3]
வசதிகள்
இங்கு குளிரூட்டப்பட்ட ஓய்வறைகளும், சாதாரண ஓய்வறைகளும், உணவகமும் உள்ளன. பணவழங்கி இயந்திரமும் உள்ளது.[7] இந்த நிலையத்தில் இலவச வை-பை வசதியும் உண்டு.[3]
இதனையும் காண்க
சான்றுகள்
மற்ற வலைத்தளங்களில்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads