முங்கேலி மாவட்டம்

சத்தீசுகரில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முங்கேலி மாவட்டம் (Mungeli district) மத்திய இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் மாவட்டங்களில் ஒன்றாகும்[1]. பிலாஸ்பூர் கோட்டத்தில் உள்ள ஐந்து மாவட்டங்களில் இம்மாவட்டமும் ஒன்றாகும். சனவரி 2012-ஆம் ஆண்டில் புதிதாக துவக்கப்பட்ட ஒன்பது புதிய மாவட்டங்களில் முங்கேலி மாவட்டமும் ஒன்றாகும். முங்கேலி மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் முங்கேலி நகரம் ஆகும். இது மாநிலத் தலைநகரம் ராய்ப்பூரிலிருந்து 104 கி. மீ., தொலைவிலும், பிலாஸ்பூரிலிருந்து 52 கி. மீ., தொலைவிலும் உள்ளது. இம்மாவட்டப் பகுதியில் அச்சனக்மர் வனவிலங்கு சரணாலயம் உள்ளது. இம்மாவட்டம் 3 வருவாய் வட்டங்களைக் கொண்டது.[2]

Remove ads

மாவட்ட எல்லைகள்

இம்மாவட்டத்தின் வடக்கில் மத்தியப் பிரதேசம் கிழக்கில் பிலாஸ்பூர் மாவட்டம், மேற்கில் கவர்தா மாவட்டம் மற்றும் தெற்கில் பெமேதரா மாவட்டம் எல்லைகளாக அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads