முசாபர்நகர் கலவரம் 2013

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முசாபர்நகர் கலவரம் உத்திரப் பிரதேசம் மாநிலத்தில், முசாபர்நகர் மாவட்டத்தில், 27 ஆகஸ்ட் 2013 அன்று தொடங்கி, மூன்று வாரங்களுக்கு இந்துக்களுக்கும் இஸ்லாமியர்களுக்கும் இடையே நடந்த கலவரத்தில் இதுவரை 60 பேர் உயிரிழந்தனர்.[3] மற்றும் 93 பேர் காயமடைந்தன[5][6][7][8]. மூன்று வாரங்களுக்குப்பின் 17 செப்டம்பர் அன்று, ஊரடங்கு உத்தரவு திரும்பப் பெறப்பட்டது மற்றும் ராணுவம் வெளியேறியது[2].

விரைவான உண்மைகள் தேதி, அமைவிடம் ...

உத்திரப் பிரதேசம் மாநிலம் முசாபர்நகர் மாவட்டம், கவால் கிராமத்தில் ஜாட் சமூகத்தைச் சார்ந்த ஒரு இளம் பெண்ணை 27-08-2013ஆம் தேதியில் இசுலாமிய இளைஞர்கள் கேலியும் கிண்டலும் செய்ததின் விளைவாக, ஷாநாவாஸ் குறைஷி என்பவரை, பாதிக்கப்பட்ட பெண்ணின் உறவினர்களான சச்சின்சிங் மற்றும் கௌரவ்சிங் அடித்துக் கொன்றனர். இதனால் ஆத்திரமடைந்த ஷாநாவாஷின் உறவினர்கள், சச்சின்சிங் மற்றும் கௌரவ்சிங்கை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர்.

மேலதிகத் தகவல்கள் முசாபர்நகரில் சமயங்கள் ...

இதனால் ஜாட் சமுக மக்களுக்கும் இசுலாமிய மக்களுக்கும் இடையே உண்டான தெருச்சண்டையில் இக்கிராமத்தைச் சார்ந்த மூன்று பேர் இறந்தனர். இதன் விளைவாக இரு சமுகத்திற்குமிடையே ஏற்பட்ட வன்முறை, முசாபர்நகர் மாவட்டத்திலும் அதன் அன்மை மாவட்டமான சாம்லியிலும் பரவியது. இவ்வன்முறையின் விளைவாக அறுபது நபர்கள் கொல்லப்பட்டனர். மேலும் நாற்பதாயிரம் மக்கள் அகதிகளாக வெளிமாவட்டங்களுக்கு புகழிடம் தேடிச் சென்றுள்ளனர்.

கலவரத்தை மேலும் பரவும்படி தூண்டிவிட்டதாக பல்வேறு அரசியல் கட்சிகளை சார்ந்த பதினாறு சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் மீது காவல்துறை வழக்கு பதிந்து நீதிமன்றத்தில் கைது ஆணை பெற்றுள்ளது. ஆனால் இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.

இக்கலவரம் தொடர்பாக செய்தி சேகரிக்க சென்ற ஏழு செய்தி நிருபர்கள் கலவரக்காரர்களால் கொல்லப்பட்டுள்ளனர். இக்கலவரத்தில் பொதுமக்கள் 43,000 பேர்கள் வீடிழந்தனர்.[9]

Remove ads

உச்சநீதிமன்ற கண்டனம்

இந்தக் கலவரத்தில் இருதரப்பிலும் பாதிக்கப்பட்ட மக்கள் இருந்தபோதும் இஸ்லாம் குடும்பங்களுக்கு மட்டும் உதவித்தொகை வழங்கி உத்தரபிரதேச அரசு உத்தரவிட்டது.கலவரத்தில் பாதிக்கப்பட்ட இந்து சமுதாயத்தினரைப் புறக்கணிப்பது சரியல்ல என்று கூறி உச்சநீதிமன்றம் உத்தரபிரதேச அரசைக் கண்டித்தது.[10][11]

மேற்கோள்கள்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads