முதலாம் குமாரகுப்தன்

From Wikipedia, the free encyclopedia

முதலாம் குமாரகுப்தன்
Remove ads

முதலாம் குமாரகுப்தன் என்பவன் குப்தப் பேரரசனாவான். இவனுக்கு சக்ராதித்யா என்ற பெயரும் இருந்தது.[2] இவர் பொ.ஊ. 415-455 வரை பதவியில் இருந்தார். இவர் இவருக்கு முன்னர் ஆட்சியில் இருந்த இரண்டாம் சந்திரகுப்தர், துருவதேவி ஆகியோரின் மகனாவார்.[3]

விரைவான உண்மைகள் முதலாம் குமாரகுப்தன், ஆட்சி ...
Thumb
பொ.ஊ. 450-இல் முதலாம் குமாரகுப்தன் காலத்திய குப்தப் பேரரசு

ஒரு வல்லமையுள்ள ஆட்சியாளனாக இருந்த இப்பேரரசர், வங்காளத்திலிருந்து கத்தியவார் வரையும், இமயத்திலிருந்து நர்மதா வரையும் பரந்திருந்த பெரிய பேரரசைப் பாதுகாத்து வந்தார். இவர் ஏறத்தாழ 40 ஆண்டுகள் திறமையாக ஆட்சி செய்தார். எனினும், இவரது ஆட்சியின் இறுத்திப் பகுதி சிறப்பாக அமையவில்லை. மத்திய இந்தியாவைச் சேர்ந்த புஷ்யமித்திர சுங்கன் என்பவன் நடத்திய கலகங்களும், வெள்ளை ஹூணர்களின் ஆக்கிரமிப்புக்களும், குப்தப் பேரரசுக்கு பிரச்சினைகளை உண்டாக்கின. ஆனால், குமாரகுப்தர், இவ்விரு பகுதியினரையும் தோற்கடித்துத் தனது வெற்றியைக் கொண்டாடுமுகமாக அசுவமேத வேள்வியை நடத்தினார்.

இவர், தனது பெயரைக்கொண்ட குமரக் கடவுளின் உருவம் பொறித்த புதிய நாணயங்களை வெளியிட்டார். இவரைப் பற்றிய குறிப்புகள் ஜூனாகத் பாறைகளில் எழுதப்பட்டுள்ளன.[4]

Remove ads

நாளாந்தா பல்கலைக்கழகம்

முதலாம் குமாரகுப்தர் நாளந்தாவில் பௌத்த சமயம் மற்றும் அறிவியல் போன்ற கல்விகளைப் பயில நாளந்தா பல்கலைக்கழகத்தை நிறுவினார். தற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனெஸ்கோ நிறுவனத்தால் 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களக்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டுள்ளது.[5][6][7]

Thumb
தில்லியிலுள்ள தில்லி இரும்புத் தூண். இது குமாரகுப்தன் காலத்தில் உருவாக்கப்பட்டது

சான்றுகள்

இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads