நாளந்தா பல்கலைக்கழகம்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
நாளந்தா பல்கலைக்கழகம் (Nalanda University) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் மையப்பகுதியில் உள்ள நாளந்தா என்ற பகுதியில் பொ.ஊ. ஐந்தாம் நூற்றாண்டில் குப்தப் பேரரசர் முதலாம் குமாரகுப்தன் ஆட்சிக் காலத்தில் (பொ.ஊ. 415–455) நிறுவப்பட்ட பல்கலைக்கழகம் ஆகும். பின்வந்த ஹர்ஷவர்தனரும் இப்பல்கலைகழகத்தை ஆதாரித்தார். நாளந்தா நகரம் பாட்னாவிலிருந்து தென்கிழக்கே 55 மைல் தொலைவில் உள்ளது. இது மகாயான புத்த மதக்கருத்துக்களை கற்பதற்கான சிறந்த இடமாக விளங்கியது. பொ.ஊ. 1197ல் தில்லி சுல்தானின் படைத்தலைவர் பக்தியார் கில்ஜியின் படைவீரர்களால் நாளந்தா பல்கலைக்கழகம் முற்றாக அழிக்கப்பட்டது.[4][5]

நாளாந்தா என்பதற்கு "அறிவை அளிப்பவர்" என்று பொருள். இப்பல்கலைக்கழகம் 14 ஹெக்டேர் நிலப் பரப்பில் அமைந்திருந்தது. இது புகழ் பெற்று இருந்த காலத்தில் திபெத், சீனா, கிரேக்கம், பாரசீகம் போன்ற நாடுகளில் இருந்து மாணவர்களும் அறிஞர்களும் இங்கு வந்து கல்வி கற்று உள்ளார்கள்.[6]
இப்பல்கலைக்கழகத்திற்கு தானமாக அளிக்கப்பட்ட நூறு முதல் இருநூறு கிராமங்களின் வருவாயைக் கொண்டு நிர்வகிக்கப்பட்டது. மகாயான பௌத்த தத்துவங்களுடன், வேதங்கள், தர்க்கம், இலக்கணம், வான இயல், மருத்துவம், சாங்கியம் போன்றவைகளும் கற்பிக்கப்பட்டது. வட மொழியே இங்கு பயிற்று மொழியாக இருந்தது.
இது உலகில் முதன்முதலில் தொடங்கப்பட்ட பல்கலைக்கழகங்களில் ஒன்றாகும். யுவான் சுவாங் இப்பல்கலைக்கழகம் குறித்து தனது பயண நூலில் விரிவாக குறித்துள்ளார்.
அக்காலத்தில் இப்பல்கலைக் கழகத்தில் 10,000 மாணவர்களும் 1,500 ஆசிரியர்களும் இருந்துள்ளனர். இப்பல்கலைக்கழகத்தின் புகழ் பெற்ற ஆசிரியர்களில் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த தர்மபாலர், திங்கநாகர், ஸ்திரமதி, சிலாபத்திரர் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவார். பல்கலைக் கழகத்திற்கான வருமானத்திற்காக 100 முதல் 200 கிராமங்கள் வழங்கப்பட்டிருந்தன.[7]
Remove ads
மீண்டும் புதுப்பொலிவுடன்
தற்போது நாளந்தா பல்கலைக்கழகம் 5 பெண்கள் உட்பட 15 மாணவர்களுடனும் 11 பேராசிரியர்களுடனும் இந்த பல்கலைக்கழகம் 29 ஆகத்து 2014 திங்கட்கிழமை முதல் தனது கற்பித்தலை புதுப்பொலிவுடன் தொடங்கியுள்ளது.[8][9]
உலகப்பாரம்பரியக் களம்
தற்போது நாளாந்தா பல்கலைக்கழகத்தை, யுனேஸ்கோ அமைப்பு 15 சூலை 2016-இல் உலகப்பாரம்பரியக் களங்களில் ஒன்றாக அறிவித்துள்ளது.[10][11][12]
இதனையும் காண்க
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads