ஸ்கந்தகுப்தர்
From Wikipedia, the free encyclopedia
Remove ads
ஸ்கந்தகுப்தர் (Skandagupta) (சமக்கிருதம்: स्कन्दगुप्त) (இறப்பு: 467) வட இந்தியாவின் குப்தப் பேரரசின் எட்டாவது பேரரசர் ஆவார். பொதுவாக இவர் குப்தப் பேரரசின் இறுதிப் பேரரசராக கருதப்பட்டவர். இவருக்குப் பின் குப்தப் பேரரசின் ஆட்சிப் பரப்புகள் படிப்படியாக வீழ்ச்சியடையத் துவங்கியது.
Remove ads
ஆட்சி
முதலாம் குமாரகுப்தனின் இளைய மனைவியின் மகனாக ஸ்கந்தகுப்தர் கருதப்படுகிறார்.[1]

ஸ்கந்தகுப்தர் துவக்கத்தில் மத்திய இந்தியாவின் சுங்கர்கள் மற்றும் வடமேற்கு இந்தியாவிலிருந்து வந்த வெள்ளை ஹூணர்களின் பெரும் தொடர் படையெடுப்புகளை எதிர்கொள்ள வேண்டியிருந்ததால், குப்தப் பேரரசின் பொருளாதாரம் வறண்டது. குறிப்பாக ஸ்கந்தகுப்தர் வெளியிட்ட செப்பு நாணயங்கள் மதிப்பு இழந்தது.[2]
கி பி இ467-இல் ஸ்கந்தகுப்தரின் மறைவிற்குப் பின் குப்தப் பேரரசை புருகுப்தர் (கி பி 467–473), இரண்டாம் குமாரகுப்தர் (கி பி 473–476), புத்தகுப்தர் (கி பி 476–495?) மற்றும் நரசிம்மகுப்தரின் ஆட்சிக் காலத்தில், குப்தப் பேரரசு ஹூணர்களால் தொடர்ந்து தாக்கப்பட்டது. இதனால் குப்தப் பேரரசின் பரப்பு வீழ்ச்சியடைந்து கொண்டே சென்றது.
Remove ads
ஸ்கந்தகுப்தரின் நாணயங்கள்
முதலாம் குமாரகுப்தன் காலத்தில் வில் வீரன், குதிரை வீரன், அரசர் & அரசி, சக்கரம் மற்றும் சிங்கத்தை வீழ்த்துபவர் என ஐந்து வகையான தங்க நாணயங்களை வெளியிட்டார்.[3] ஸ்கந்தகுப்தர் காலத்தில் பொருளாதாரம் வீழ்ச்சியடைவே, கருடன், காளை, பலி பீடம் உருவம் பொறித்த வெள்ளி நாணயங்களை வெளியிட்டார்.[4]முதலாம் குமாரகுப்தன் காலத்திய தங்க நாணயத்தின் எடை 8.4 கிராமாக இருந்தது. ஸ்கந்தகுப்தர் நாணயத்தின் மதிப்பை மறுமதிப்பீடு செய்து, தங்க நாணயத்தின் எடையை 9.2 கிராமாக உயர்த்தினார்.[5]
Remove ads
மேற்கோள்கள்
மேலும் படிக்க
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads