முதலாம் சந்திரகுப்தர்
king ajasatta From Wikipedia, the free encyclopedia
Remove ads
சந்திரகுப்தர் அல்லது முதலாம் சந்திரகுப்தர் (Chandragupta) , குப்தப் பேரரசின் மூன்றாவது பேரரசர் ஆவார். குப்த பேரரசை விரிவாக்கியவர்களில் முதலாமவர். கி பி 320 முதல் 335 முடிய குப்த பேரரசை ஆட்சி செய்தவர். இவரது மகன் சமுத்திரகுப்தர் மற்றும் பேரன் இரண்டாம் சந்திரகுப்தர் குப்தப் பேரரசின் முக்கிய பேரரசர்கள் ஆவார். இவர் தற்கால உத்திரப் பிரதேசம், பீகார் மற்றும் நேபாளத்தின் பெரும் பகுதிகளை ஆட்சி செய்தவர்.[1]

ஸ்ரீகுப்தரின் பேரனும், கடோற்கஜனின் மகனுமாகிய முதலாம் சந்திரகுப்தர் மகாராஜா பட்டத்துடன் குப்தப் பேரரசின் ஆட்சியாளராக இருந்தார். கி பி 320-இல் குப்தப் பேரரசின் அரியணை ஏறிய, முதலாம் சந்திரகுப்தர் லிச்சாவி நாட்டு இளவரசியை திருமணம் செய்ததன் மூலம், முதலாம் சந்திரகுப்தரின் அரசியல் ஆதிக்கம் கூடியது. இவரது பதினைந்து ஆண்டு கால ஆட்சியில், வட இந்தியாவின் தற்கால வடக்கு பிகார், உத்தரப் பிரதேசம் மற்றும் தெற்கு நேபாளப் பகுதிகளில் குப்தப் பேரரசை விரிவாக்கினார்.
முதலாம் சந்திரகுப்தருக்குப் பின் அவரது மகன் சமுத்திரகுப்தர் குப்தப் பேரரசை மேலும் விரிவாக்கினார்.
Remove ads
மேற்கோள்கள்
ஆதாரங்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads