மூன்றாம் அர்தசெராக்சஸ்

From Wikipedia, the free encyclopedia

மூன்றாம் அர்தசெராக்சஸ்
Remove ads


மூன்றாம் அர்தசெராக்சஸ் (Artaxerxes III (பழைய பாரசீக மொழியில்|𐎠𐎼𐎫𐎧𐏁𐏂) பாரசீக அகாமனிசியப் பேரரசை கிமு 404 முதல் கிமு 358 முடிய 46 ஆண்டுகள் ஆண்ட பேரரசர் ஆவார்.[1][2] இவர் கிமு 343-இல் பண்டைய எகிப்தின் பிந்தைய கால எகிப்திய இராச்சியத்தை ஆண்ட முப்பதாம் வம்சத்தின் பார்வோன் இரண்டாம் நெதெனெபோவை வென்று, எகிப்தை பாரசீகத்தின் ஒரு மாகாணமாக அறிவித்தார். மாசிடோனியாவின் மன்னர் மக்கெடோனின் இரண்டாம் பிலிப் ஆட்சிக் காலத்தில் கிமு 350 - 341-களில் போனீசியா, சைப்பிரசு மற்றும் சிதோன் நகரங்களில் அகாமனிசியப் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் நடத்திய பெரும் கிளர்ச்சிகளை ஒடுக்கினார். இவர் பெர்சப்பொலிஸ் நகரத்தில் புதிய அரண்மனையை நிறுவத் துவங்கினார். மேலும் ஏஜியன் கடல் அருகே உள்ள கிரேக்கர்களின் ஐயோனியா மற்றும் ஏதன்ஸ் நாட்டவர்களின் மத்தியதரைக் கடல் அருகே இருந்த லைசியா மற்றும் சிசிலி போன்ற நகரங்களை மூன்றாம் அர்தசெராக்சஸ் படைகள் கைப்பற்றியது. [3]கிமு 338-இல் மூன்றாம் அர்தசெராக்சஸ் இறந்த பின் அவர் மகன் அர்செஸ் அகாமனிசியப் பேரரசின் அரியணையில் அமர்ந்தார்.

Thumb
மூன்றாம் அர்தசெராக்சஸ்சின் கல்லறை, பெர்சப்பொலிஸ் நகரம் ஈரான்
Thumb
மூன்றாம் அர்தசெராக்சஸ் கல்லறையில் அகாமனிசியப் பேரரசின் பல்வேறு இனக்குழுவின் போர்வீரர்களின் சிற்பம்
விரைவான உண்மைகள் மூன்றாம் அர்தசெராக்சஸ், அகாமனிசியப் பேரரசர் ...


Remove ads

படக்காட்சிகள்

அகாமனிசியப் பேரரசர்கள்

இதனையும் காண்க

மேற்கோள்கள்

ஆதார நூற்பட்டியல்

வெளி இணைப்புகள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads