பாரசீகப் பேரரசு
From Wikipedia, the free encyclopedia
Remove ads
பாரசீகப் பேரரசு என்பது, பாரசீகரின் தொடக்கத் தாயகமான ஈரானியச் சமவெளிப் பகுதிகளுடன் சேர்த்து, மேற்காசியா, நடு ஆசியா மற்றும் காக்கேசியப் பகுதிகளை ஆண்ட, தொடர்ச்சியான பல ஈரானியப் பேரரசுகளைக் குறிக்கும். பாரசீகப் பேரரசுகளில் மிகவும் பெரிதாகப் பரந்திருந்தது, சைரசு, முதலாம் டேரியஸ், முதலாம் செர்கஸ் ஆகிய பேரரசர்களின் கீழிருந்த அக்கீமெனிட் பேரரசு (கி.மு 550 – கிமு 330) ஆகும். சைரசு இப்பேரரசு பழங்காலக் கிரேக்க அரசுகளின் எதிரியாக விளங்கியது. இது ஈரானின் பார்ஸ் மாகாணத்தில் தொடங்கி விரிவடைந்த ஒரு பேரரசு ஆகும்.


பாரசீகத்தின் முதல் பேரரசான அகாமனிசியப் பேரரசை முதலாம் டேரியசியால் கிமு 550-இல் நிறுவப்பட்டது. இவன் மீடியாப் பேரரசைக் கைப்பற்றியதுடன், புது பாபிலோனியப் பேரரசு, போனீசியாவைக் கைபபற்றினார். இவரது வழிவந்த முதலாம் சைரஸ் கூடுதலாக பண்டைய எகிப்து மற்றும் கிரேக்கத்தின் லிடியாவைக் கைப்பற்றினார். கிமு 323-இல் பேரரசன் அலெக்சாந்தர் பாரசீகப் பேரரசைக் கைப்பற்றினார். எனினும், ஈரானிய மரபினரான பார்த்தியர், செசெனிட்டுகள் காலத்திலும், பின்னர் இசுலாமின் எழுச்சிக்குப் பின்னர் சியா இசுலாமிய சபாரித்து வம்சம், சபாவித்து வம்சம், அப்சரித்து வம்சம், குவாஜர் வம்சம் மற்றும் பகலவி வம்சம் ஈரானை ஆண்டது.
Remove ads
பாரசீகத்தை ஆண்ட பாரசீக வம்சங்கள்
- அகாமனிசியப் பேரரசு - கிமு 550 - கிமு 330
- பார்த்தியப் பேரரசு - கிமு 247 – கி பி 224
- சசானியப் பேரரசு - கிபி 224 – 651
- சபாரித்து வம்சம் - கிபி 861 – 1003
- சபாவித்து வம்சம் - கிபி 1501 – 1736
- அப்சரித்து வம்சம் - கிபி 1736 – 1796
- குவாஜர் வம்சம் - கிபி 1785 – 1925
- பகலவி வம்சம்- கிபி 1925 – 1979
கிபி 621-இல் சசானியப் பேரரசு அப்சரித்து வம்சத்தின் நாதிர் ஷா காலத்திய பாரசீகப் பேரரசு
Remove ads
பாரசீகப் பேரரசர்கள் & ஈரான் மன்னர்கள்=
பாரசீகப் பேரரசர்கள்
ஈரான் மன்னர்கள்
மேற்கோள்கள்
வெளி இணைப்புகள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads