முத்துராச்சா

From Wikipedia, the free encyclopedia

Remove ads

முத்துராஜா நாயுடு (Muthuraja Naidu) அல்லது முத்திரிய நாயுடு (Muthiriya Naidu) எனப்படுவோர் தமிழகத்தில் வாழுகின்ற ஓர் தெலுங்கு இனக்குழுவினர் ஆவர்.[1]

விரைவான உண்மைகள் குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள், மொழி(கள்) ...

இவர்கள் விஜயநகர ஆட்சிக் காலத்தில் ஆந்திராவிலிருந்து தமிழகம் வந்து குடியேறினர்.[2][3][4] தமிழகத்தில் வாழும் முத்துராஜா நாயுடு சமூகத்தவர்கள் வீட்டில் தெலுங்கு மொழி பேசுகின்றனர்.[5][6][7] விஜயநகர மன்னர்கள் இத்தெலுங்கு சமூகத்திற்கு பாளையக்காரன் என்ற பட்டத்தை வழங்கினார்கள்.[8][9][10] இதன் காரணமாக இவர்கள், தங்களை பாளையக்கார நாயக்கர் என்றும், பாளையக்கார நாயுடு என்றும் அழைத்துக் கொள்கின்றனர். மேலும் இத்தெலுங்கு சமூகத்திற்கு தமிழ்நாடு அரசின் இட ஒதுக்கீடு பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் முத்தரையர் மற்றும் முத்துராஜா என்ற பெயரில் சாதி சான்றிதழ் வழங்கப்படுகிறது.[11]

Remove ads

தெலுங்கு முத்தரையர் பிரிவுகள்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவால், 1996இல் வெளியிடப்பட்ட முத்தரையர் அரசாணை எண் G.O.15/22.02.1996 படி, முத்தரையர் சமூகத்தில் 29 உட்பிரிவுகள் உள்ளன.[12][13] அதில் 9 உட்பிரிவினர் தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் ஆவர். அவை பின்வருமாறு:-

  1. முதிராஜ்[14][15][16]
  2. தலையாரி[17][18][19]
  3. முத்திரிய ராவ்
  4. பாளையக்காரன்[20][21][22][23]
  5. முத்துராஜா நாயுடு[24][25]
  6. பாளையக்கார நாயுடு
  7. முத்திரிய நாயுடு (கவரா)[26][27][28]
  8. முத்திரிய நாயக்கர்[29][30]
  9. பாளையக்கார நாயக்கர்[31][32]
Remove ads

கட்டபொம்மன் தொடர்பு

முத்தரையர் இனத்தின் உட்பிரிவினரான பாளையக்கார நாயக்கர் இனத்தவர்கள் தங்களை வீரபாண்டிய கட்டபொம்மன் மரபில் வந்தவர்கள் என்று கூறினார்கள்.[33][34] இதன் காரணமாக கட்டபொம்மன் பிறந்த சாதியான கம்பளத்தார்[35][36] சமூகத்தை முத்தரையர் இனத்தின் ஓர் உட்பிரிவாக அறிவிக்க வேண்டும் என தமிழக சட்டசபையில் பேசிய எம். ஆர். வேந்தனும், வெங்கடாசலமும் அன்றைய தமிழக முதல்வர் எம். ஜி. இராமச்சந்திரனிடம் கோரிக்கை வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.[37][38]

Remove ads

மக்கள் தொகை

சென்னை மாகாணத்தின் வட ஆற்காடு[39] மற்றும் செங்கல்பட்டு[40] மாவட்டத்தில் கணிசமாகவும், தென் ஆற்காடு[41]மாவட்டத்தில் குறைந்த அளவிலும் இச்சமூக மக்கள் வசிக்கின்றனர்.

வாழும் பகுதிகள்

வட தமிழகத்தில் முத்தரைய நாயுடு மற்றும் முத்தரைய நாயக்கர் என்ற பெயரில் வசிக்கும் தெலுங்கு சமூகத்தை சேர்ந்தவர்கள், குறிப்பாக சென்னை, திருவள்ளுவர், காஞ்சிபுரம், வேலூர் ஆகிய மாவட்டங்களில் கணிசமாகவும், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் குறைந்த அளவிலும் வசிக்கின்றனர்.[42][43]

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads