செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)

From Wikipedia, the free encyclopedia

செங்கல்பட்டு மாவட்டம் (சென்னை மாகாணம்)
Remove ads

செங்கல்பட்டு மாவட்டம் (Chingleput district) என்பது பிரித்தானிய இந்தியாவின், சென்னை மாகாணத்தின் ஒரு மாவட்டம் ஆகும். இம்மாவட்டமானது தற்போதைய காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு மாவட்டம், திருவள்ளூர் மாவட்டம் மற்றும் சென்னை நகரின் சிலபகுதிகளைக் கொண்டதாக இருந்தது. 7,970 சதுர கிலோமீட்டர் (3,079 சதுர மைல்) பரப்பளவு கொண்ட மாவட்டமான இது ஆறு வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. மாவட்டத்தின் முதல் தலைநகராக கருங்குழி 1825 முதல் 1835 வரை இயங்கிவந்த நிலையில் பின்னர் காஞ்சிபுரத்துக்கு மாற்றப்பட்டது. என்றாலும் இடையில் 1859-இல் சென்னை மாநகரத்தின் ஒரு பகுதியாக தற்போது உள்ள சைதாபேட்டையானது செங்கல்பட்டு மாவட்டத்தின் நிர்வாக தலைநகராக இருந்தது.[1]

விரைவான உண்மைகள்
Thumb
1956-இல் சென்னை மாநிலத்தில் செங்கல்பட்டு மாவட்டத்தின் அமைவிடம்
Remove ads

வரலாறு

Thumb
1913இல் செங்கல்பட்டு கோட்டையின் தோற்றம். இந்தக் கோட்டைப் பகுதியில் 1752இல் செங்கல்பட்டு போர் நடந்தது.

இராபர்ட் புருசு ஃபூட் மேற்கொண்ட அகழ்வாய்வில், இப்பகுதியில் கற்காலத்திலிருந்தே மனிதர்கள் வாழ்ந்துவந்தது தெரியவருகிறது. கி,மு. முதல் நூற்றாண்டின் முடிவில் இப்பகுதியானது தமிழகத்தை ஆண்ட சங்ககால தமிழ் மன்னன் தொண்டைமான் இளந்திரையன் ஆட்சியின்கீழ் வந்தது. கி.பி. 500இல் இப்பகுதியை பல்லவர் காஞ்சிபுரத்தை தலைநகராக கொண்டு ஆண்டனர். பல்லவர்கள் வீழ்ச்சியடைந்தபோது கி.பி. 760இல் சாளுக்கியர்களின் ஆதரவுடன், மேலைக் கங்கர்களால் இப்பகுதி கைப்பற்றப்பட்டது. அதன்பிறகு செங்கல்பட்டை இராஷ்டிரகூடர், சோழர், வாரங்கல்லின் காக்கத்தியர் ஆகியோர் 13ஆம் நூற்றாண்டில் இப்பகுதியை தில்லி சுல்தானகத்தால் வெற்றிகொள்ளப்படும்வரை ஆண்டனர். பின்னர் இப்பகுதியை வெற்றிகொண்ட விஜயநகர பேரரசர்கள்   1393 முதல் 1565 வரை ஆட்சி செய்தனர். பின்னர் 1565 முதல் 1640 வரை செங்கல்பட்டை சந்திரகிரி இராச்சியமானது கைப்பற்றி ஆண்டது.

1687 ஆம் ஆண்டில் முகலாயர்கள் ஆட்சியின்கீழ் இந்தப் பகுதியை இணைக்கப்பட்டது. பின்னர் இப்பகுதியின் ஆட்சியாளராக 1763 முதல் ஆற்காடு நவாப் மாறினார்.1763 ஆம் ஆண்டில், செங்கல்பட்டானது பிரித்தானிய கிழக்கிந்திய கம்பெனிக்கு ஆற்காடு நவாபான முகம்மது அலியால் வழங்கப்பட்டது. இப்பகுதியானது கர்நாடகப் போர்களின் களமாக இருந்தது. மேலும் அடிக்கடி திப்பு சுல்தானால் கைப்பற்றப்பட்டும் வந்தது. 1801 ஆம் ஆண்டில், இறுதியாக ஆற்காடு நவாப் இப்பகுதியின் முழு இறையாண்மையும் பிரித்தானிய கிழக்கிந்திய நிறுவனத்திடம் இழந்தார்.[2]

இந்திய விடுதலைக்குப் பிறகு இந்த மாவட்டமானது 1950இல் புதிய பெயரைப் பெற்ற சென்னை மாநிலத்தின் ஒரு பகுதியாக ஆனது. 1956 ஆம் ஆண்டு இந்திய ஒன்றியத்தால் இயற்றப்பட்ட மாநில மறுசீரமைப்பு சட்டத்தின் விளைவாக, மொழிவாரியாக மாநில எல்லைகள் மறு வரையறை செய்யப்பட்டது. சென்னை மாநிலமானது இறுதியாக 1969 சனவரி 14 அன்று தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டது.[3]

Remove ads

வட்டங்கள்

செங்கல்பட்டு மாவட்டமானது ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டு இருந்தது:

  • செங்கல்பட்டு (பரப்பு: 1,130 சதுர கிலோமீட்டர்கள் (436 sq mi); தலைமையகம்:செங்கல்பட்டு)
  • காஞ்சிபுரம் (பரப்பு: 1,330 சதுர கிலோமீட்டர்கள் (514 sq mi); தலைமையகம்: காஞ்சிபுரம்)
  • மதுராந்தகம் (பரப்பு: 1,800 சதுர கிலோமீட்டர்கள் (696 sq mi); தலைமையகம்:மதுராந்தகம்)
  • பொன்னேரி (பரப்பு: 900 சதுர கிலோமீட்டர்கள் (347 sq mi); தலைமையகம்:பொன்னேரி)
  • சைதாப்பேட்டை (பரப்பு: 890 சதுர கிலோமீட்டர்கள் (342 sq mi); தலைமையகம்:சைதாப்பேட்டை)
  • திருவள்ளூர் (பரப்பு: 1,930 சதுர கிலோமீட்டர்கள் (744 sq mi); தலைமையகம்:திருவள்ளூர்)
  • திருத்தணி; தலைமையகம்: திருத்தணி) .
Remove ads

நிர்வாகம்

இந்த மாவட்டமானது மூன்று துணைக் கோட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. ஒவொரு கோட்டமும் மூன்று சாராட்சியர்களின் நிர்வாகத்தில் இருந்தது:

  • செங்கல்பட்டு துணைக்- கோட்டம்: செங்கல்பட்டு, மதுராந்தகம், காஞ்சிவரம் ஆகிய வட்டங்கள்
  • சைதாபேட்டை துணைக்-கோட்டம்: சைதாப்பேட்டை வட்டம்
  • திருவள்ளூர் துணைக்-கோட்டம்: திருவள்ளூர் மற்றும் பொன்னேரி வட்டங்கள்.

1901 ஆம் ஆண்டில், இந்த மாவட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய இரு நகராட்சிகள் இருந்தன.

மக்கள் வகைப்பாடு

மேலதிகத் தகவல்கள் ஆண்டு, ம.தொ. ...

1901 ஆம் ஆண்டில், செங்கல்பட்டு மாவட்டத்தின் மொத்த மக்கள் தொகையானது 1,312,222 ஆக இருந்தது. இதில் 96 விழுக்காட்டு மக்கள் இந்துக்கள், மீதமுள்ளவர்கள் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் மக்களாவர். நான்கில் மூன்று பங்கினரின் தாய்மொழியாக தமிழ் இருந்தது. மீதமுள்ளவர்கள் தெலுங்கர்களாவர். இந்த மாவட்டமானது சென்னைக்கு அருகில் இருந்த காரணத்தால் ஏராளமான ஐரோப்பியரும் இருந்தனர்.

Remove ads

மேலும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads