தென் ஆற்காடு மாவட்டம்

தமிழ்நாட்டில் இருந்த முன்னாள் மாவட்டம் From Wikipedia, the free encyclopedia

தென் ஆற்காடு மாவட்டம்map
Remove ads

தென் ஆற்காடு மாவட்டம் இந்தியாவின் தமிழ்நாட்டில் அமைந்திருந்த பிரிக்கப்பட்ட பழைய மாவட்டம் ஆகும்.   

Thumb
தமிழ்நாட்டில் தென் ஆற்காடு மாவட்டத்தின் அமைவிடம்

முகலாய ஆட்சிக்குட்பட்ட ஆற்காடு மாநிலத்தின் (சுபா) தலைநகராக ஆற்காடு (Arcot) இருந்தது. இந்நகரம் இன்று ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ளது. 17ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் முகலாயர் தென்னிந்தியாவில் தங்கள் ஆட்சியை இழந்தபோது, ஆற்காடு பகுதிகளை உள்ளூர் ஆற்காடு நவாப்கள் ஆட்சி புரியத் தொடங்கினார். ஆற்காடு சுபாவை 1801ஆம் ஆண்டு பிரித்தானிய கிழக்கிந்தியக் கம்பனி கையகப்படுத்தியது. தனது நிருவாக வசதிக்காக வட ஆற்காடு, தென் ஆற்காடு மாவட்டம் என இரு மாவட்டங்களாக பிரித்து ஆண்டது. தென்னார்க்காடு மாவட்டம் எனவும் ஆங்கிலேயர்களால் பெயர் சூட்டப்பட்டன. தென்னார்க்காடு மாவட்டத்தின் பரப்பு 10,770 சதுர கி.மீ. ஆகும்.[1] 1993ஆம் ஆண்டு செப்டம்பர் 30 முதல் இந்த மாவட்டம் மீண்டும் நிருவாகச் சீரமைப்பிற்காக கடலூர் மாவட்டம், விழுப்புரம் மாவட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.[2] 11°30′N 79°25′E இரண்டாகப் பிரிக்கப்படுவதற்கு முன் தென்னாற்காட்டின் தலைநகராக கடலூர் மாவட்டம் இருந்தது. விழுப்புரம் மாவட்டத்தின் தெற்குமேற்குப் பகுதிகளைக் கொண்டு, தமிழ்நாட்டின் 34-வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் 8 சனவரி 2019 அன்று புதிதாக உருவாக்கப்பட்டது. இம்மாவட்டத்தின் தலைமையிடம் கள்ளக்குறிச்சி நகரம் ஆகும். இப்புதிய மாவட்டத்தை 26 நவம்பர் 2019 அன்று தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி. பழனிச்சாமி கள்ளக்குறிச்சியில் துவக்கி வைத்தார்.


தென் ஆற்காடு மாவட்டம் ஒன்பது வட்டங்களாக பிரிக்கப்பட்டிருந்தது :-

Remove ads

இதனையும் காண்க

மேற்கோள்கள்

Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads