முத்துராமலிங்கம் (திரைப்படம்)
From Wikipedia, the free encyclopedia
Remove ads
முத்துராமலிங்கம்(Muthuramalingam) ஒரு 2017 ஆம் ஆண்டில் வெளியான தமிழ் மொழி அதிரடித் திரைப்படம் ஆகும். இத்திரைப்படம் ராஜதுரை என்பவரால் எழுதி இயக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா ஆனந்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். நெப்போலியனும் கதையை நகர்த்திச் செல்லக்கூடிய முக்கிய துணைப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசை இளையராஜாவால் அமைக்கப்பட்டுள்ளது. பாடல்கள் பஞ்சு அருணாச்சலத்தால் எழுதப்பட்டுள்ளன. இத்திரைப்படம் 24 பிப்ரவரி 2017 இல் திரைக்கு வந்தது.

Remove ads
நடிப்பு
- முத்துராமலிங்கமாக கௌதம் கார்த்திக்
- விஜியாக பிரியா ஆனந்து
- மூக்கையாத் தேவராக நெப்போலியன்
- சுமன்
- சின்னி ஜெயந்த்
- விவேக்
- சிங்கம்புலி
- சிங்கமுத்து
- செல் முருகன்
- ஃபெப்சி விஜயன்
- வம்சி கிருஷ்ணா
- அழகு
- ரேகா
- விஜி சந்திரசேகர்
தயாரிப்பு
இத்திரைப்படம் குறித்து 1 ஜனவரி 2016 இல் கௌதம் கார்த்திக் இயக்குநர் ராஜதுரையுடன் இணைந்து பணிபுரியப்போவதாகத் தெரிவித்து செய்திக்குறிப்புடன் அறிவிக்கப்பட்டது. பஞ்சு அருணாச்சலம், தனது இறப்புக்கு முன்னதாக இத்திரைப்படத்தின் பாடல்களுக்காக திரைத்துறையில் நீண்ட ஓய்விற்குப் பின் 21 ஆண்டுகள் கழித்து இளையராஜாவுடன் இணைந்துள்ளார்.[1][2][3] ஜனவரி மாதத்தின் மத்தியில், கேத்ரின் திரேசா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமானார். மேலும், பிரபு, சுமன் மற்றும் விவேக் ஆகியோரும் துணை கதாபாத்திரங்களில் நடிக்க ஒப்பந்தமாயினர்.[4] கேத்ரின் திரேசாவுக்குப் பதிலாக பிரியா ஆனந்தும், பிரபுவுக்குப் பதிலாக காரத்திக்கும் ஒப்பந்தமாயினர். ஒரு சில மாதங்களுக்குப் பிறகு, கார்த்திக்கின் கால் காயம் காரணமாக, கார்த்திக்குக்குப் பதிலாக நெப்போலியன் ஒப்பந்தமானார். முன்னதாக, நெப்போலியன் அமெரிக்காவின் டென்னிசி மாகாணத்தில் உள்ள நாஷ்வில்லில் வசித்து வருகிறார். இத்திரைப்படத்தின் மூலம் தமிழ்த்திரையுலகத்திற்குத் திரும்பும் இவர் தனது விடுமுறைக்காலத்தில் இந்தியா வரும்போது 22 நாட்கள் நடிப்பதற்கு இசைந்துள்ளார்.[5][6] பிரியா ஆனந்து தான் ஒரு பள்ளி செல்லும் பெண்ணாக நடித்துள்ளதாகவும், விவேக் காவல் அலுவலர் பாத்திரத்தில் நகைச்சுவை செய்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.[7][8] இத்திரைப்படத்தில் கௌதம் கார்த்திக் தனது பாத்திரத்திற்காக சிலம்பம் கற்றுக் கொள்ளும் காட்சிகள் சங்கரன்கோவில், குற்றால் போன்ற இடங்களில் படம் பிடிக்கப்பட்டுள்ளன.[9] இத்திரைப்படத்திற்கான படப்பிடிப்பு தொடங்கும் முன்பாக “கிச்சாஸ் காளி என்ற சண்டைப்பயிற்சியாளரிடம் கௌதம் சிலம்ப பயிற்சி வகுப்புகளில் கலந்து கொண்டுள்ளார்.[9] இத்திரைப்படம் ஜூலை 2016 படப்பிடிப்புகள் முடிந்து மற்றுமொரு குறுகிய கால வேலைகள் சென்னையில் உள்ள அரங்கம் ஒன்றில் வைத்து நடைபெற்று முடிக்கப்பட்டது.[10][11]
Remove ads
வெளியீடு
இத்திரைப்படம் 2017 ஆம் ஆண்டு பிப்ரவரி 24 ஆம் நாள் வெளியிடப்பட்டது. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சனத்தில் இத்திரைப்படம் பெருத்த ஏமாற்றத்தை அளித்திருப்பதாகவும், உச்சகாட்சியை நெருங்க, நெருங்க, நாடகத்தனமான சோகக்காட்சிகளைக் கொண்டிருந்ததுாகவும், கதாநாயகன் மற்றும் வில்லன் குடும்பங்களுக்கிடையேயான பார்த்துப்பார்த்து சலித்துப்போன எதிரெதிரான மோதல்கள் பொறுமையைச் சோதிப்பதாக இருப்பதாகவும், ஒரு வேளை படம் 20-30 ஆண்டுகளுக்கு முன்னதாக வெளியாகியிருந்தால் வெற்றி பெற்றிருக்கலாம் எனவும் தெரிவித்திருந்தது.[12] தி நியூ இந்தியன் எக்சுபிரசு நல்ல முன்பாதித் திரைக்கதையானது பின்பாதியில் வரும் பொருத்தமற்ற திருப்பங்கள் மற்றும் வன்முறைகளால் வீணடிக்கப்பட்டு விட்டதாகத் தெரிவித்துள்ளது. இத்திரைப்படத்தில் வெளிப்படுத்தப்பட்டுள்ள சில உணர்வுகள், தமிழ் தேசியவாதம் தலைதுாக்கியுள்ள இக்காலகட்டத்தில் மிகவும் ஆபத்தை விளைவிக்கக்கூடியன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.[13] இந்தியாகில்ட்ஸ் ராஜதுரையின் இயக்கம் திரைக்கதையின் போக்கை இழுத்துப் பிடிக்கக்கூடிய வலிமை இல்லாமல் கலகலத்துப் போய் விட்டதாகவும், ஒருவேளை எண்பதுகளில் படம் வெளிவந்திருந்தால் நன்றாக வந்திருக்கலாம் எனவும் கூறி முடித்துக்கொண்டனர்.[14]
மேற்கோள்கள்
Wikiwand - on
Seamless Wikipedia browsing. On steroids.
Remove ads