முருகய்யன் (கதைமாந்தர்)

பொன்னியின் செல்வனில் வரும் கதாபாத்திரம் From Wikipedia, the free encyclopedia

Remove ads

முருகய்யன் கல்கி எழுதிய பொன்னியின் செல்வன் புதினத்தின் கதாப்பாத்திரம். இவர் கோடிக்கரையில் வசிக்கின்ற படகோட்டி ஆவார். மேலும் ராக்கம்மாள் என்ற பாண்டிய ஆபத்துதவியின் கணவனாகவும், படகோட்டி பெண்ணான பூங்குழலியின் அண்ணனுமாவார்.

விரைவான உண்மைகள் முருகய்யன், முதல் தோற்றம் ...
Remove ads

கதாப்பாத்திரத்தின் இயல்பு

கோடிக்கரையில் வசித்து வரும் தியாகவிடங்கரின் மகன் முருகய்யன் ஒரு படகோட்டி அவனைத் தேடி வரும் இருவர், பழுவூர் இளையராணி ஈழத்திற்கு செல்லத் தங்களை அனுப்பியதாகக் கூறுகின்றனர். முருகய்யன் முதலில் செல்ல மறுத்தபோதும், அதிகப் பணம் தருவதாக கூறியதனால், மனைவி ராக்கம்மாள் வற்புறுத்தலினால் செல்கிறான். இளவரசர் அருள்மொழி வர்மனைக் கொல்லவே அவர்கள் ஈழத்திற்கு வந்தார்கள் என்ற உண்மையை பூங்குழலி விளக்குகிறாள். தன்னுடைய தவறினை உணர்ந்து இளவரசரிடம் மன்னிப்பு கேட்கிறான் முருகய்யன்.

நாகப்பட்டினத்தில் ராக்கம்மாள், யானைப்பாகன், மந்திரவாதி ரவிதாசன் மூவரும் பேசிக் கொண்டதிலிருந்து, அடுத்தநாள் யானைக்கு மதம் பிடிக்கும் என்ற தகவலை இளவரசரைச் சந்தித்துச் சொல்கிறான். இளவரசரும் அந்த எச்சரிக்கையை ஏற்று கவனமாக இருந்து, தஞ்சைக்கு யானையின் மூலமே தப்பிச் செல்கிறார். அதன் பின் யானைப்பாகனைக் கண்டறிந்து உண்மையை அறிகிறான்.

Remove ads

நூல்கள்

முருகய்யனை கதைபாத்திரமாக கொண்டு வெளிவந்துள்ள நூல்கள்.

இவற்றையும் பார்க்கவும்


Loading related searches...

Wikiwand - on

Seamless Wikipedia browsing. On steroids.

Remove ads